அன்பியத் துளிகள் - சவேரியார்பாளையம்

சேலம் மறைமாவட்டம்

(An Archive of Events)

  • 2024 (342)
    • 19/12/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், பாலகன் இயேசு, கிறிஸ்துமஸ் தாத்தாக்கள், அருட்பணியாளர்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் பாடல் குழுவானது, கொளத்தூர் புனித பவுலடியார் மற்றும் காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியங்களில் உள்ள இல்லங்களுக்கு சென்று, கிறிஸ்து பிறப்பு நற்செய்தியை அறிவித்தனர்; அனைத்து அன்பிய இறைமக்களும் பெருமகிழ்வுடன் கலந்துக் கொண்டனர்.


    • 18/12/2024 புதன் கிழமை அன்று, மாலை 5:45 மணியளவில், பாலகன் இயேசு, மரியா, யோசேப்பு, கிறிஸ்துமஸ் தாத்தாக்கள், அருட்பணியாளர்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் பாடல் குழுவானது, பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியங்களில் உள்ள இல்லங்களுக்கு சென்று, கிறிஸ்து பிறப்பு நற்செய்தியை அறிவித்தனர்; அனைத்து அன்பிய இறைமக்களும் பெருமகிழ்வுடன் கலந்துக் கொண்டனர்.


    • 17/12/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 5:45 மணியளவில், பாலகன் இயேசு, மரியா, யோசேப்பு, கிறிஸ்துமஸ் தாத்தாக்கள், அருட்பணியாளர்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் பாடல் குழுவானது, கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் மற்றும் மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியங்களில் உள்ள இல்லங்களுக்கு சென்று, கிறிஸ்து பிறப்பு நற்செய்தியை அறிவித்தனர்; அனைத்து அன்பிய இறைமக்களும் பெருமகிழ்வுடன் கலந்துக் கொண்டனர்.


    • 15/12/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், பாலகன் இயேசு, மரியா, யோசேப்பு, கிறிஸ்துமஸ் தாத்தாக்கள், அருட்பணியாளர்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் பாடல் குழுவானது, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு, புனித சவேரியார் மற்றும் புனித இஞ்ஞாசியார் அன்பியங்களில் உள்ள இல்லங்களுக்கு சென்று, கிறிஸ்து பிறப்பு நற்செய்தியை அறிவித்தனர்; அனைத்து அன்பிய இறைமக்களும் பெருமகிழ்வுடன் கலந்துக் கொண்டனர்.


    • 15/12/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் இணைந்து,'திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு' திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 09/12/2024 திங்கட் கிழமை அன்று, காலை 7 மணியளவில், தூய கன்னி மரியாவின் அமலோற்பவ பெருவிழா மற்றும் பங்கு தேர்த்திருவிழா நன்றித் திருப்பலி நடைபெற்றது; பின்னர், கொடியிறக்கம் செய்யப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 08/12/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, இரவு 9 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர் பவனியானது நடைபெற தொடங்கியது. முதலாவதாக, அதிதூதர் மிக்கேல் தேரும், இரண்டாவதாக, புனித செபஸ்தியார் தேரும், மூன்றாவதாக, புனித பிரான்சிஸ் சவேரியார் தேரும், நான்காவதாக, புனித சந்தியாகப்பர் (St.George) தேரும், ஐந்தாவதாக, அன்னை மரி தேரும் புறப்பட்டது; அனைத்து தேர்களும் பங்கு இளைஞர்களின் முன்னெடுப்பில் அலங்கரிக்கப்பட்டு, பவனியாக கொண்டுவரப்பட்டது.


    • 08/12/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 9 மணியளவில், சவேரியார்பாளையத்திற்கு வருகை புரிந்த பேரருட்திரு. ஆயர் அருள்செல்வம் இராயப்பன் அவர்களுக்கு பங்கின் சார்பாக சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் அவர் தலைமையில், புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் இணைந்து, திருவிழா திருப்பலியை சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். பிறகு, நடைபெற்ற ஆயர் சந்திப்பில், அன்பு ஆயருக்கு அனைத்து அன்பியங்களின் சார்பாக பொன்னாடை அணிவித்தல், நினைவு பரிசு, காணிக்கை, வரவேற்புரை மூலமாக மரியாதை செய்யப்பட்டது; ஆயரின் ஆசிர் உரையுடன், விழா இனிதே நிறைவுற்றது.


    • 07/12/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, குருத்துவ பொன்விழா நாயகர் மேட்டூர் பங்குத்தந்தை அருட்பணி.இருதய செல்வம் மற்றும் மேட்டூர் மறைவட்ட குருக்களால் தலைமையேற்கப்பட்ட, புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா நவநாள் நவநாள் திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் காணிக்கை பவனி ஆகியவற்றை வழிநடத்தினர். திருப்பலிக்கு பிறகு, மேட்டூர் பங்குத்தந்தை அருட்பணி.இருதய செல்வம் அவர்களுக்கு குருத்துவ பொன்விழா வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


    • 06/12/2024 மாதத்தின் முதல் வெள்ளி அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில், மேட்டூர் உதவி பங்குத்தந்தை அருட்பணி.பிரான்சிஸ் சேவியர் அவர்களால் நற்கருணை ஆராதனையும், ஆசிரும் வழங்கப்பட்டது; சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் தீப, தூப, மலரஞ்சலி ஆகியவற்றை வழிநடத்தினர். பிறகு, அனைவருக்கும் அன்பு உணவு வழங்கப்பட்டது.


    • 05/12/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, சங்ககிரி பங்குத்தந்தை அருட்பணி.கிருபாகரன் அவர்களால் தலைமையேற்கப்பட்ட, புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா நவநாள் நவநாள் திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் காணிக்கை பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 04/12/2024 புதன் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா மற்றும் கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் இணைந்து, புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் காணிக்கை பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 03/12/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கொளத்தூர் புனித பவுலடியார் மற்றும் காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 02/12/2024 திங்கட் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியம், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியம், பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா அன்பிய இறைமக்கள் இணைந்து, தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாட்டை வழிநடத்தினர்.


    • 01/12/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் பங்கிலுள்ள அனைத்து அன்பிய இறைமக்களும் இணைந்து, திருவருகைக் காலம் முதல் ஞாயிறு மற்றும் பங்கு திருவிழா கொடியேற்ற திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்; திருப்பலிக்கு பிறகு, பங்கின் முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி.செல்வம் அவர்களுக்கு குருத்துவ பொன்விழா வாழ்த்து தெரிவிக்கப்பட்டது; பின்னர், அவரால் புனித சவேரியார் திருகொடியானது மந்திரிக்கப்பட்டு, ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்துவரப்பட்டு, கொடியேற்றப்பட்டது.


    • 30/11/2024 சனிக் கிழமை அன்று, இரவு 7:30 மணியளவில், சேலம் மூவேந்தர் அருட்பணி நிலையத்தில், திருத்தந்தையின் இந்திய தூதர் பேராயர் The Most Rev. Leopoldo Girelli அவர்களின் தலைமையில் புனித அந்திரேயா, திருத்தூதர் விழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.


    • 30/11/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் மற்றும் புனித அந்திரேயா, திருத்தூதர் விழா திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 29/11/2023 வெள்ளிக் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பிய இறைமக்கள் இணைந்து, அன்பியக் குடும்பங்களில் மரித்தவர்களின் ஆன்மாக்கள் இளைப்பாறுதல் அடைய இறைவேண்டல் செய்தனர்.


    • 24/11/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா மற்றும் கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் இணைந்து, இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 23/11/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 22/11/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திருமதி. குழந்தை தெரேசா-தோமினிக் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 19: 45-48. 24/11/2024-இல், இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா திருப்பலியை சிறப்பித்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 19/11/2024செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. ஜெயபிரகாஷ் - திருமதி. அந்தோணியம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 19 : 1 - 10. 03/12/2024-இல், தேர் திருவிழா நவநாள் திருப்பலியை சிறப்பித்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 18/11/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. மதலைமுத்து - திருமதி. ஜெயமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 18 : 35 – 43. 02/12/2024-இல், தேர் திருவிழா நவநாள் திருப்பலியை சிறப்பித்தல் மற்றும் பங்கு திருவிழா தொடர்பான ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 17/11/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திருமதி. அருள்செல்வி - ஆரோக்கியசாமி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 13: 24-32. கல்லறைத் தோட்டத்திற்கு சென்று, இறைவேண்டல் செய்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 17/11/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திரு. மரிய சூசை - திருமதி. மரிய புஷ்பம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 13: 24-32. திருவிழா நவநாள் திருப்பலியில் நமது அன்பிய குடும்பங்கள் தவறாமல் கலந்துக் கொண்டு, பக்தி முயற்சியில் பங்கெடுப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 17/11/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 4:30 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பியக் கூட்டமானது, திரு. அந்தோணிசாமி - திருமதி. பெரியநாயகம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 12 : 28-34. பங்கு தேர் திருவிழா நவநாள் திருப்பலிகளில் தவறாமல் பங்கேற்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 17/11/2024 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில், யூபிலி 2025-ஐ முன்னிட்டு சேலம் மூவேந்தர் அருட்பணி மையத்தில், சேலம் மறைமாவட்டம் மேதகு ஆயர். அருள்செல்வம் இராயப்பன் அவர்கள் தலைமையில், இரண்டாம் வத்திக்கான் திருச்சங்க கலை விழா நடைபெற்றது; அதில், சவேரியார்பாளையம் மற்றும் பூமனூரிலுள்ள அனைத்து அன்பிய இறைமக்களில் சிலர் கலந்துக் கொண்டு, போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றனர்; அருட்பணி. ஜெய் பெர்னார்ட் ஜோசப் மற்றும் அருட்பணி. ஹென்றி கிஷோர் அவர்கள் அனைவரையும் சிறப்பாக ஒருங்கிணைத்தினர்.


    • 17/11/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, பொதுக்காலம் 33ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 16/11/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 15/11/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் கெபியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 14/11/2024 வியாழக் கிழமை அன்று, கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, அந்தோணி இராஜ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 17 : 20 - 25. சவேரியார்பாளையம் தேர் திருவிழா நன்றாக நடைபெற ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 13/11/2024 புதன் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திரு. பெரியநாயகம் - திருமதி. ரீட்டா மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 17: 11-19. இம்மாதத்தில், கல்லறைத் தோட்டம் சென்று ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 12/11/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 11/11/2024 திங்கட் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பியக் கூட்டமானது, திரு. ஜான் ஜோசப் - திருமதி. அந்தோணியம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 17 : 1 – 6. 02/12/2024-இல், தேர் திருவிழா நவநாள் திருப்பலியை சிறப்பித்தல் மற்றும் பங்கு திருவிழா தொடர்பான ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 10/11/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, திருப்பலிக்குப் பிறகு, சவேரியார்பாளையம் பங்குத்தந்தை இல்லத்தில், பங்குத்தந்தை அருட்பணி. சிங்கராயன் தலைமையில் நடைபெற்ற மேய்ப்புப்பணி பேரவை(பங்கு பேரவை) கூட்டம் நடைபெற்றது; சவேரியார்பாளையம் பங்கு தேர் திருவிழா பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன. அனைத்து அன்பிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.


    • 10/11/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, பொதுக்காலம் 32ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மற்றும் தீப, தூப, மலரஞ்சலி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 09/11/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 07/11/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், பாட்டன் தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திருமதி. நிர்மலா மேரி - செல்வராஜ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 15 : 1–10. டிசம்பர் மாத பங்கு திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஜெபிப்பது. என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 03/11/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பிய இறைமக்கள் இணைந்து, பொதுக்காலம் 31ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 02/11/2024 சனிக் கிழமை அன்று, மாலை 4 மணியளவில், இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவையொட்டி, காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; பிறகு, காவேரிபுரத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்தில் இறந்த விசுவாசிகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காய் வேண்டுதல் செய்யப்பட்டது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 02/11/2024 சனிக் கிழமை அன்று, காலை 10:30 மணியளவில், இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவையொட்டி, மோளைப்பாறையூரில் உள்ள ரோமன் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்தில் இறந்த விசுவாசிகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காய் வேண்டுதல் செய்யப்பட்டது; மோளைப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 02/11/2024 சனிக் கிழமை அன்று, காலை 10 மணியளவில், இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவையொட்டி, சிலுவைபாளையத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்தில் இறந்த விசுவாசிகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காய் வேண்டுதல் செய்யப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா மற்றும் கொளத்தூர் புனித பவுலடியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 02/11/2024 சனிக் கிழமை அன்று, காலை 7:30 மணியளவில், இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவையொட்டி, செங்கல்மேட்டில் உள்ள ரோமன் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கேற்றனர்.


    • 01/11/2024 மாதத்தின் முதல் வெள்ளி மற்றும் புனிதர் அனைவர் பெருவிழாவையொட்டி, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் திரு இருதய ஜெபமாலை, புனிதர் அனைவர் மன்றாட்டு மாலை ஜெபிக்கப்பட்டு, நற்கருணை ஆராதனை, நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அதனை தொடர்ந்து புனிதர் அனைவர் பெருவிழா திருப்பலியும் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 31/10/2024 வியாழக் கிழமை அன்று, ஜெபமாலை மாதத்தின் கடைசிநாளையொட்டி, பூமனூர் புனித பெரியநாயகி அன்னை திருத்தலத்தில், மதியம் 2 மணிமுதல் 4 மணிவரை , சவேரியார்பாளையம் மற்றும் பூமனூரைச் சார்ந்த மரியாயின் சேனையினர் முன்னெடுப்பில், தொடர் ஜெபமாலை நடைபெற்றது; மாலை 4 மணிமுதல் 6 மணிவரை, யூபிலி 2025 தொடர்பான கருத்தமர்வு மேட்டூர் மறைவட்ட இறைமக்களுக்காக அருட்பணி. ஹென்றி கிஷோர் அவர்களால் வழங்கப்பட்டது; பிறகு, புனித மரியன்னையின் சிறு தேர் பவனி, ஜெபமாலை, மன்றாட்டு மாலை ஆகியவை நடைபெற்று, மேட்டூர் அணை பங்குத்தந்தை அருட்பணி. இருதய செல்வம் மற்றும் மேட்டூர் மறைவட்ட குருக்களால் கூட்டுத் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கேற்றனர்.


    • 30/10/2024 புதன் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், ஜெபமாலை மாதத்தையொட்டி, சவேரியார்பாளையம் ஆலய வளாகத்தில், மரியாவின் சேனையினர் முன்னெடுப்பில் புனித மரியன்னையின் சிறு தேர் பவனி, ஜெபமாலை, மன்றாட்டு மாலை ஆகியவை நடைபெற்று, திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது; அதில் கும்ப ஆரத்தி மற்றும் தீப, தூப, மலரஞ்சலி, காணிக்கை பவனி ஆகியவை இடம்பெற்றன. அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கேற்றனர்.


    • 29/10/2024 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், ஜெபமாலை மாதத்தையொட்டி, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தைச் சுற்றி புனித மரியன்னையின் சிறுதேர் பவனியானது ஜெபமாலை மற்றும் மன்றாட்டு மாலை ஜெபித்தலுடன் நடைபெற்றது; பின்னர் சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர். இறுதியில் அன்பின் உணவு வழங்கப்பட்டது.


    • 27/10/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியக் கூட்டமானது, திரு. சவுரியப்பன் - திருமதி. எலிசபெத் இராணி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 10 : 46 – 52. வருகின்ற 29/10/2024-இல், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் நடைபெறும் மாதா தேர் பவனியில் கலந்து கொள்ளுதல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 27/10/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, இயேசுவின் கண்மணிகள் மற்றும் நண்பர்கள் இணைந்து பொதுக்காலம் 30ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 26/10/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 25/10/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் ஜெபமாலை ஜெபிக்கப்பட்டு, இறைபுகழ்ச்சியுடன் நற்கருணை ஆராதனையும் நடைபெற்று, நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அதனை தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 24/10/2024 வியாழக் கிழமை அன்று, கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திரு.சார்லஸ் ரிச்சர்ட் - திருமதி. ஷீலா கிளாடிஸ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 12 : 49 - 53. 25/10/2024-இல், நடைபெறும் நற்கருணை ஆராதனை மற்றும் 31/10/2024-இல், பூமனூரில் நடைபெறும் தொடர் ஜெபமாலையில் பங்கேற்பது என்ற செயல்கள் திட்டமிடப்பட்டது.


    • 22/10/2024செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, புனித பதுவை அந்தோணியார் சிற்றாலய வளாகத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 12 : 35 - 38. வருகின்ற கல்லறை திருநாளையொட்டி, கல்லறைகளை சுத்தம் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 20/10/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6:45 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திரு. அருள்சாமி - திருமதி. இராஜேந்திரம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 10: 35-45. குழந்தை இயேசு கெபியில் மரித்தவர்களுக்காக திருப்பலியை ஒப்புக்கொடுப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 20/10/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 4:45 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பியக் கூட்டமானது, திரு. டென்னிஸ் - திருமதி. மார்கரெட் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 10: 35-45. ஜெபமாலை மாதமான அக்டோபர் மாதத்தில், தவறாமல் ஜெபமாலை ஜெபிப்பது, 25/10/2024-இல், நடைபெறும் நற்கருணை ஆராதனை மற்றும் 31/10/2024-இல், பூமனூரில் நடைபெறும் தொடர் ஜெபமாலையில் பங்கேற்பது.


    • 20/10/2024 ஞாயிறு திருப்பலிக்குப் பிறகு, உணவு அரங்குகள் மற்றும் விளையாட்டுகளின் வழியே நற்செய்தி அறிவிப்பு ஞாயிறு நிதி திரட்டப்பட்டது. அனைத்து அன்பியங்களும் அவரவர் பணிகளைச் சிறப்பாக செய்தனர். அனைத்து இறைமக்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


    • 20/10/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மரியாயின் சேனையினர் சீருடையில் வந்து, பொதுக்காலம் 29ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 19/10/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 16/10/2024 புதன் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திரு. ஜீவ தீபன் - திருமதி. ஜெனிட் லிபியா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 11: 42-46. 31/10/2024-இல், பூமனூரில் நடைபெறும் தொடர் ஜெபமாலையில் பங்கேற்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 15/10/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 14/10/2024 திங்கட் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திரு. ஜான்சன் - திருமதி. செல்வநாயகி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 11: 29-32. வருகின்ற கல்லறைத் திருநாளையொட்டி, கல்லறைத் தோட்டத்திற்கு சென்று, சுத்தம் செய்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 13/10/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மதியம் 1 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. குழந்தை சாமி - திருமதி. சூசைமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 10 : 17 - 30.அக்டோபர் மாத முடிவில், சிலுவைப்பாளையத்தில் நடைபெறும் மாதா தேர் பவனியில் பங்கு பெறுவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 13/10/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, திருப்பலிக்குப் பிறகு, பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார், பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா மற்றும் கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் இணைந்து தின்பண்டங்கள் மற்றும் பானங்கள் விற்பனை செய்தும், ஏலம் விடப்பட்டும் 'மறைபரப்பு ஞாயிறு' நிதி திரட்டப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 13/10/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, கொளத்தூர் புனித பவுலடியார் மற்றும் காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, பொதுக்காலம் 28ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். 'மறைபரப்பு ஞாயிறு' சிறப்பு காணிக்கை எடுக்கப்பட்டது.


    • 12/10/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 08/10/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 07/10/2024 திங்கட் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், பாட்டன் தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திரு. ஆபிரகாம் வியான்னி - திருமதி. ரோஷினி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 1 : 26–38. ஜெபமாலை மாதமான அக்டோபர் மாதத்தில், தவறாமல் இல்லத்தில் ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது; அதனை தொடர்ந்து, தூய ஜெபமாலை மாதா நினைவையொட்டி, அன்பியத் திருப்பலியும் நடைபெற்றது.


    • 06/10/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, திருப்பலிக்குப் பிறகு, சவேரியார்பாளையம் பங்குத்தந்தை இல்லத்தில், பங்குத்தந்தை அருட்பணி. சிங்கராயன் தலைமையில், அனைத்து அன்பிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட 'மறைபரப்பு ஞாயிறு' திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது; அனைவருக்கும் பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.


    • 06/10/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 8 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு கெபியிலிருந்து, புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் வரை 'திருவிவிலிய பவனி'யானது நடைபெற்று, அதில் கும்ப ஆரத்தி மற்றும் தீப, தூப, மலரஞ்சலி ஆகியவை இடம்பெற்றன; பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் இணைந்து, 'விவிலிய ஞாயிறு' திருப்பலியை "என் வார்த்தையில் நிலைத்திருங்கள்" என்ற மையப்பொருளில் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்; விவிலிய ஞாயிறுக்கான சிறப்பு காணிக்கையானது எடுக்கப்பட்டது.


    • 05/10/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 04/10/2024 மாதத்தின் முதல் வெள்ளி அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் ஜெபமாலை, மன்றாட்டு மாலை ஜெபிக்கப்பட்டு, திருப்பலியும், அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது; இறுதியில் நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 02/10/2024 புதன் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திரு. சகாய ராஜ் - திருமதி. நிர்மலா மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 18: 1-5, 10. இம்மாதத்தில் ஒவ்வொரு நாளாக ஓர் இல்லத்தில், மாதா சுரூபத்தை வைத்து ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 01/10/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 29/09/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா மற்றும் கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் இணைந்து, பொதுக்காலம் 26ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 28/09/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 27/09/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பியக் கூட்டமானது, திரு. செல்வராஜ் - திருமதி. சவரியம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 9 : 18 – 22. 06/10/2024-இல், விவிலிய ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 22/09/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திரு. மணி - திருமதி. மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 9 : 30 - 37. கல்லறைத் தோட்டத்திற்கு சென்று, இறந்த ஆன்மாக்களுக்காக ஜெபித்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 22/09/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திரு. ஆரோக்கியசாமி - திருமதி. மதலீனா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 8 : 27-35. நம் ஊரில் உடல்நிலை சரியில்லாதவரை சென்று சந்தித்து ஆறுதல் கூறுவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 22/09/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, பொதுக்காலம் 25ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 21/09/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் மற்றும் புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா திருப்பலியும் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 20/09/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் கெபியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 19/09/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. வின்சென்ட் பால்ராஜ் - திருமதி. இலலிதா மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 7 : 36 - 50. 06/10/2024-இல், விவிலிய ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 18/09/2024 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. இயேசுராஜ் - திருமதி. பாரதி மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 7 : 31 - 35. விவிலிய மாதத்தையொட்டி நடைபெறும் விவிலிய போட்டிகளில் பங்கு பெறுதல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 15/09/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பியக் கூட்டமானது, திரு. ஜோசப் அமுல்ராஜ் - திருமதி. நேவிஸ் பிரியா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 8 : 27 – 35. 22/09/2024 அன்று நடைபெறும், ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 15/09/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பிய முன்னெடுப்பில், அனைத்து அன்பிய இறைமக்களும் இணைந்து பொதுக்காலம் 24ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 14/09/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் மற்றும் 'திருச்சிலுவையின் மகிமை' விழா திருப்பலியும் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 12/09/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திரு. ஜான் பால் - திருமதி. கண்மணி தேவி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 6: 27-38. 29/09/2024-இல், ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 10/09/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 08/09/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பிய இறைமக்கள் முன்னெடுப்பில், அனைத்து அன்பிய பெண் குழந்தைகள் இணைந்து அன்னை மரியாளின் பிறந்தநாளையொட்டி, 'பெண் குழந்தைகள்' நாளாக பொதுக்காலம் 23ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். திருப்பலிக்கு பிறகு, மரியாயின் சேனை, இயேசுவின் கண்மணிகள் மற்றும் நண்பர்களால் ஆரோக்கிய அன்னையின் தேர் பவனியானது, ஆலய வளாகத்தைச் சுற்றி ஜெபமாலை ஜெபித்தலுடன் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 06/09/2024 மாதத்தின் முதல் வெள்ளி அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் திரு இருதய ஜெபமாலை, மன்றாட்டு மாலை ஜெபிக்கப்பட்டு, திருப்பலியும், அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது; இறுதியில் நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 05/09/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திரு. ஜான் ஜோசப் மாணிக்கம் - திருமதி. பெரியநாயகம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 5 : 1 - 11. 08/09/2024 அன்று, சவேரியார்பாளையத்தில் நடைபெறும் மரியன்னையின் பிறப்பு திருப்பலி மற்றும் தேர் பவனியில் பங்குகொள்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 04/09/2024 புதன் கிழமை அன்று, கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திரு. பெரியநாயகம் - திருமதி. மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 4 : 38 - 44. 08/09/2024 அன்று, சவேரியார்பாளையத்தில் நடைபெறும் மரியன்னையின் தேர் பவனியில் பங்குகொள்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 02/09/2024 திங்கட் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திரு. அசோக் குமார் - திருமதி. புனிதா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 4: 16-30. 08/09/2024 அன்று நமது பங்கில் நடைபெறும், மரியன்னையின் தேர் பவனியில் பங்குகொள்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 01/09/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, இயேசுவின் கண்மணிகள் மற்றும் நண்பர்கள் இணைந்து பொதுக்காலம் 22ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 31/08/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 28/08/2024 புதன் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, திருமதி. மரிய சுந்தரம் அவர்களின் இல்லத்தில், அவரது நோய் நீங்கி குணமடைய செபம் செய்தனர்.


    • 27/08/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 27/08/2024 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு.ஆரோக்கியசாமி - திருமதி. லூர்தம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 23 : 23 - 26. அன்பியத்திலுள்ள நோய்வாய்பட்டவரின் இல்லம் சென்று ஜெபித்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 26/08/2024 திங்கட் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பியக் கூட்டமானது, திரு. ஜான் மரிய எட்வின் - திருமதி. ஜோஸ்பின் மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 23 : 13 – 22. அன்பியத்திலுள்ள நோய்வாய்ப்பட்டவர்களை சந்தித்து, அவர்களுக்காக இறைவேண்டல் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 26/08/2024 திங்கட் கிழமை அன்று, காலை 11:30 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பியக் கூட்டமானது, திரு. இயேசுராஜ் - திருமதி. ரோணிக்கம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 23 : 13 – 22. அன்பியத்தில் இறந்தவரின் வீட்டிற்கு சென்று, ஜெபமாலை ஜெபித்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 25/08/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மரியாயின் சேனையினர் சீருடையில் வந்து, பொதுக்காலம் 21ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 24/08/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வளாகத்தில், கேரள வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூட்டு இறைவேண்டலாக, ஆலயத்தைச் சுற்றி ஜெபமாலை பவனி, சகாயமாதா நவநாள் இறைவேண்டல் மற்றும் நற்கருணை ஆராதனை நடைபெற்றது; பிறகு, புனித பர்த்தலமேயு - திருத்தூதர் விழா திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 20/08/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 18/08/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திரு. சின்னப்பன் - திருமதி. ஞான சௌந்தரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 6: 51-58. 24/08/2024 அன்று, நமது பங்கில் நடைபெறும், கேரள நிலச்சரிவு தொடர்பான கூட்டு இறைவேண்டலில் பங்குபெறுவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 18/08/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, கொளத்தூர் புனித பவுலடியார் மற்றும் காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, பொதுக்காலம் 20ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். கேரள நிலச்சரிவு நிவாரண சிறப்பு காணிக்கை எடுக்கப்பட்டது.


    • 16/08/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் கெபியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 11/08/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திரு. மகிமை நாதன் - திருமதி. செல்வமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 6: 41 - 51. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு ஆலயத்தின் வழியே நிதியுதவி செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 11/08/2024 புதன் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திரு. ஜான்கனி - திருமதி. மார்கரெட் மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 6: 41 - 51. நமது அன்பிய திருப்பலியின்போது அனைத்து குடும்பங்களும் பங்கேற்றல் மற்றும் பவனியாக செல்லுதல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 11/08/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் இணைந்து, புனித மாக்சிமிலியன் கோல்பே நினைவையொட்டி பொதுக்காலம் 19ஆம் வார ஞாயிறை 'சிறைப்பணி ஞாயிறு' திருப்பலியாகச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 10/08/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் மற்றும் புனித லாரன்ஸ் - திருத்தொண்டர், மறைச்சாட்சி விழா திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 09/08/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திரு. ஜோசப் - திருமதி. மதலையம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 16: 24-28. 15/08/2024 அன்று, தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா திருப்பலியில் பங்கேற்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 09/08/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பிய வழிகாட்டி திரு. சகாயநாதன் அவர்களின் இல்லத்தில், அவர் அறுவைசிகிச்சை நல்லமுறையில் நடைபெற்று, வீடுதிரும்பியதை முன்னிட்டு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் இறைவேண்டல் நடைபெற்றது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 08/08/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. சிலுவை முத்து - திருமதி. ரெஜினா மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 16: 13-23. 11/08/2024-இல், ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 07/08/2024 புதன் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திரு. ஜான் பிரிட்டோ - திருமதி. இன்ஃபென்டா ஜூலியட் இராணி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 15: 21-28. 15/08/2024 அன்று, தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா திருப்பலியில் பங்கேற்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 06/08/2024 செவ்வாய்க் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், பாட்டன் தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திரு. பீட்டர் இராஜா - திருமதி. மேரி ஜெரினா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 9: 2-9. 11/08/2024-இல், ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 05/08/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 04/08/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா மற்றும் கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் இணைந்து, பொதுக்காலம் 18ஆம் வார ஞாயிறு மற்றும் குருக்களின் பாதுகாவலர் புனித ஜான் மரிய வியான்னியின் நினைவு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 03/08/2024 சனிக் கிழமை அன்று, ஆடி 18-ஐ முன்னிட்டு, பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா மற்றும் சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, புனித வனத்து அந்தோணியாருக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் வைத்தனர்.


    • 02/08/2024 மாதத்தின் முதல் வெள்ளி அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் திரு இருதய ஜெபமாலை, மன்றாட்டு மாலை ஜெபிக்கப்பட்டு, திருப்பலியும், அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது; இறுதியில் நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 31/07/2024 புதன் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பிய இறைமக்கள் முன்னெடுப்பில், புனித லொயோலா இஞ்ஞாசியார் நினைவு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மற்றும் தீப, தூப, மலரஞ்சலி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 28/07/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பியக் கூட்டமானது, திரு. ஜான் பால் - திருமதி. சந்திரா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 6: 1-15. 31/07/2024 அன்று மாலை நடைபெறும், புனித லொயோலா இஞ்ஞாசியார் நினைவு திருப்பலியைச் சிறப்பித்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 28/07/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, திருப்பலிக்குப் பிறகு, சவேரியார்பாளையம் பங்குத்தந்தை இல்லத்தில், பங்குத்தந்தை அருட்பணி. சிங்கராயன் தலைமையில் நடைபெற்ற மேய்ப்புப்பணி பேரவை(பங்கு பேரவை) கூட்டம் நடைபெற்றது; சவேரியார்பாளையத்தில் உள்ள நிலப்பிரச்சனைகள் மற்றும் கல்லறை விதிமுறைகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன.


    • 28/07/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, இயேசு கிறிஸ்துவின் தாத்தா - பாட்டியும், அன்னை மரியாவின் தாயும் - தந்தையுமான புனிதர்கள் சுவக்கீன் - அன்னாவின் நினைவையொட்டி, 'உலக தாத்தா பாட்டிகள்' தினமாக, "முதிர் வயதில் என்னைத் தள்ளி விடாதேயும்" என்ற மையப் பொருளில் திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள், தீப, தூப, மலரஞ்சலி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 27/07/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 25/07/2024 வியாழக் கிழமை அன்று, காலை 11:30 மணியளவில், மோளப்பாறையூர் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் புனித மகதலா மரியா தேர் திருவிழா திருப்பலியானது மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பிய இறைமக்களால் சிறப்பிக்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கு கொண்டனர்.


    • 24/07/2024 புதன் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திரு. சவரியப்பன் - திருமதி. சவரியம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 13: 1 - 9. நோயாளிகளை சந்தித்து ஜெபித்து, ஆறுதல் தருவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 23/07/2024 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. சவரியப்பன் - திருமதி. மரியசெல்வம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 12 : 46 - 50. 18/08/2024-இல், ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 21/07/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 20/07/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 18/07/2024 வியாழக் கிழமை அன்று, கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திருமதி. நிக்கோலாஸ் மேரி - மரிய மிக்கேல் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 11: 28-30. அன்பியத்தில் தொலைவிலுள்ள இல்லங்களில் அன்பியக் கூட்டத்தை நடத்துவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 17/07/2024 புதன் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திரு. பெலிக்ஸ் - திருமதி. ஜான்சி இராணி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 6 : 1 – 6. நம் பங்கிலுள்ள அரசுப் பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு தருவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 17/07/2024 புதன் கிழமை அன்று, மதியம் 1 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திரு. தாமஸ் செல்வம் - திருமதி. இலயோலா மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 11: 25-27. நோயில் பூசுதல் என்ற குணமளிக்கும் அருட்சாதனம் பெறக்கூடியவர்களுக்காக செபித்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 17/07/2024 புதன் கிழமை அன்று, காலை 10 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் தேர் திருவிழா கொடியிறக்க திருப்பலியானது, சவேரியார்பாளையம், உதவி பங்குத்தந்தை அருட்பணி. எட்வின் சைமன் அவர்களால் நிறைவேற்றப்பட்டது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் முன்னெடுப்பில், திருப்பலி சிறப்பிக்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கு கொண்டனர்.


    • 16/07/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 5 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் தேர் திருவிழா திருப்பலியானது, மேட்டூர் அணை, உதவி பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் அவர்களால் நிறைவேற்றப்பட்டது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் முன்னெடுப்பில், திருப்பலி சிறப்பிக்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கு கொண்டனர். பிறகு, அன்பின் உணவு வழங்கப்பட்டு, தேர் பவனியுடன் திருவிழா இனிதே நிறைவுற்றது.


    • 15/07/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் நவநாள் நடைபெற்றது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 14/07/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் நவநாள் நடைபெற்றது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 14/07/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மதியம் 1 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பியக் கூட்டமானது, திருமதி. அருள்மேரி - செலுவப்பன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 6 : 7 – 13. காவேரிபுரம், மேடுதானப்பட்டி திருவிழாக்களுக்கு அன்பியத்திலுள்ள அனைவரும் செல்ல முயற்சி எடுத்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 14/07/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பிய இறைமக்கள் இணைந்து, 'கடல் ஞாயிறு' திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 13/07/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 13/07/2024 சனிக் கிழமை அன்று, மாலை 5 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் நவநாள் நடைபெற்றது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 12/07/2024 வெள்ளிக் கிழமை அன்று, காலை 11:30 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் தேர் திருவிழாவையொட்டி, கொடியானது அருட்பணி. சிங்கராயன் அவர்களால் ஏற்றப்பட்டு, திருப்பலியானது நடைபெற்றது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்களுடன் இணைந்து பிற அன்பிய இறைமக்களும் பங்கு கொண்டனர்.


    • 10/07/2024 புதன் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திருமதி. இராஜேந்திரம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 10: 1-7. 16/07/2024 அன்று காவேரிபுரத்தில் நடைபெறும், புனித பதுவை அந்தோணியார் தேர் திருவிழாவில் கலந்து கொள்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 09/07/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 08/07/2024 திங்கட் கிழமை அன்று, மாலை 5 மணியளவில், பாட்டன் தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திரு. இயேசுராஜ் - திருமதி. சூர்யா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 9: 18-26. 16/07/2024-இல், காவேரிபுரத்தில் நடைபெறும் புனித பதுவை அந்தோணியார் தேர் திருவிழாவில் பங்கேற்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 07/07/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திரு. செல்வராஜ் - திருமதி. மேரி ஸ்டெல்லா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 6: 1-16. 04/08/2024 அன்று சிறப்பிக்கும் திருப்பலியின்போது, புதியவர்களுக்கு வாய்ப்பு தருதல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 07/07/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, இயேசுவின் கண்மணிகள் மற்றும் நண்பர்கள் இணைந்து பொதுக்காலம் 14ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 06/07/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 05/07/2024 மாதத்தின் முதல் வெள்ளி அன்று, மாலை 6:30 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் திருப்பலியும், அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது; இறுதியில் நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 02/07/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • திரு இருதய மாதமான ஜூன் மாதத்தில், விரும்பிய அனைத்து அன்பிய இல்லங்களிலும், திரு இருதய அரசாட்சி நிறுவுவதும், புதுப்பித்தலும் நடைபெற்றது.


    • 30/06/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மரியாயின் சேனையினர் சீருடையில் வந்து, பொதுக்காலம் 13ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 29/06/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 26/06/2024 புதன் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திருமதி. ஆரோக்கியமேரி - கிளமெண்ட் ஜெபமாலை அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 7: 15-20. 14/07/2024 அன்று, நடைபெறும் ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 23/06/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் இறைப்புகழ்ச்சியுடன் கூடிய நற்கருணை ஆராதனை அருட்பணி. பிரான்சிஸ் சேவியர், உதவி பங்குத்தந்தை, மேட்டூர் அவர்களால் தொடங்கப்பட்டது; நற்கருணை பவனியானது சவேரியார்பாளையம் குழந்தை இயேசு, புனித சவேரியார் மற்றும் புனித இஞ்ஞாசியார் அன்பிய இறைமக்கள், மரியாயின் சேனை, இயேசுவின் கண்மணிகள் மற்றும் நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர். இறுதியில், அன்பின் உணவு வழங்கப்பட்டது.


    • 23/06/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, கொளத்தூர் புனித பவுலடியார் மற்றும் காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, 'கிறிஸ்தவரும் அரசியலும்' என்ற மையக்கருத்தில் 'பொதுநிலையினர் ஞாயிறு' திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 22/06/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 21/06/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் கெபியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 18/06/2024 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. இயேசுராஜ் - திருமதி. பாரதி மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 5: 43 - 48. 23/06/2024-இல், ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 17/06/2024 திங்கட் கிழமை அன்று, மதியம் 1 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திருமதி. வசந்தா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 5: 38 - 42. 23/06/2024 அன்று மாலை நடைபெறும், நற்கருணை பவனியில் பங்கெடுப்பது மற்றும் தேவையான உதவிகளைச் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 16/06/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பியக் கூட்டமானது, திரு. குழந்தைசாமி - திருமதி. ஜெயந்திராணி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 4: 26-34. 23/06/2024 அன்று மாலை நடைபெறும், நற்கருணை பவனியில் பங்கெடுப்பது மற்றும் தேவையான உதவிகளைச் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 16/06/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மதியம் 12:30 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியக் கூட்டமானது, திரு. சவரியப்பன் - திருமதி. ஆரோக்கிய மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 4: 26-34. அன்பியத்திலுள்ள நோயாளிகளின் இல்லத்திற்கு சென்று, ஜெபமாலை ஜெபித்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 16/06/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, திருப்பலிக்குப் பிறகு, சவேரியார்பாளையம் பங்குத்தந்தை இல்லத்தில், பங்குத்தந்தை அருட்பணி. சிங்கராயன் தலைமையில் நடைபெற்ற மேய்ப்புப்பணி பேரவை(பங்கு பேரவை) கூட்டத்தில், அனைத்து அன்பிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். 23/06/2024 அன்று மாலையில் நடைபெறும், நற்கருணை பவனி மற்றும் ஆசீர் வழங்குதல் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டு, பணிகள் பகிர்தளிக்கப்பட்டன.


    • 16/06/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் இணைந்து, பொதுக்காலம் 11ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 15/06/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 14/06/2024 வெள்ளிக் கிழமை அன்று, கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திரு. அந்தோணி கோபிதரன் - திருமதி. கிறிஸ்டினா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 5: 27-32. காவேரிபுரத்தில் நடைபெற இருக்கின்ற புனித பதுவை அந்தோணியார் தேரில் கலந்துக் கொள்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 13/06/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திரு. மரிய ஸ்டீபன் இராஜ் - திருமதி. ஹெலன் ரோஸ்மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 10: 1-9. கூழ்கரட்டில் நடைபெறும் திருப்பலியில் தவறாமல் கலந்துக் கொள்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 13/06/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில், புனித அந்தோணியார் - மறைப்பணியாளர், மறைவல்லுநர் நினைவாக மன்றாட்டு மாலையுடன் கூடிய ஜெபம் ஜெபிக்கப்பட்டது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 12/06/2024 புதன் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திரு. அருளப்பன் - திருமதி. ரோஸ்மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 5: 17-19. சவேரியார்பாளையத்தில் நடைபெறப் போகின்ற நற்கருணைப் பவனியில் கலந்துக் கொள்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 11/06/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திருமதி. செல்வம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 10: 7-13. 16/06/2024-இல், நடைபெறும் திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 11/06/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 10/06/2024 திங்கட் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், பாட்டன் தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திருமதி. லூர்து மேரி - சைமன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 5: 1-12. 16/06/2024-இல், நடைபெறும் திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 09/06/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா மற்றும் கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் இணைந்து, பொதுக்காலம் 10ஆம் வார ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 08/06/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் மற்றும் தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம் நினைவு திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 07/06/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் இயேசுவின் திருஇதய மன்றாட்டு மாலையும், இயேசுவின் திருஇதய பெருவிழா திருப்பலியும், அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது; இறுதியில் நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 04/06/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 02/06/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 8 மணியளவில், புதிய உதவி பங்குத்தந்தை அருட்பணி. எட்வின் சைமன் அவர்களுக்கு வரவேற்பும், சந்திப்பும் வழங்கப்பட்டது; பிறகு, சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பிய இறைமக்கள் இணைந்து 'கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா' திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள், தீப, தூப, மலரஞ்சலி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 31/10/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், வணக்க மாதத்தின் இறுதிநாள் மற்றும் தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் விழாவையொட்டி, சிலுவைபாளையம் பகுதியைச் சுற்றி புனித மரியன்னையின் சிறுதேர் பவனியானது ஜெபமாலை மற்றும் மன்றாட்டு மாலை ஜெபித்தலுடன் நடைபெற்றது; பின்னர் சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர். இறுதியில் அன்பின் உணவாக பொங்கல் மற்றும் சுண்டல் வழங்கப்பட்டது.


    • 31/05/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், வணக்க மாதத்தின் இறுதிநாள் மற்றும் தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் விழாவையொட்டி, சவேரியார்பாளையம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வளாகத்தில், புனித மரியன்னையின் சிறு தேர் பவனி, ஜெபமாலை, மன்றாட்டு மாலை ஆகியவை நடைபெற்று, அனைத்து அன்பிய இறைமக்களால் திருப்பலி சிறப்பிக்கப்பட்டது; இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள், தீப, தூப, மலரஞ்சலி ஆகியவற்றை வழிநடத்தினர்; இறுதியில் அன்பின் உணவாக பாயசம் வழங்கப்பட்டது.


    • 26/05/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பிய இறைமக்கள் இணைந்து 'மூவொரு கடவுள் பெருவிழா' திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள், தீப, தூப, மலரஞ்சலி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 25/05/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 24/05/2024 வெள்ளிக் கிழமை அன்று, காலை 8:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, சேலம் சின்னக் கொல்லப்பட்டியில், மரியன்னையின் மாநாடு (Marian Congress) 'மரியன்னையின் விடுதலை ஆன்மீகம்' என்ற மையக்கருத்தில் நடைபெற்றது; விழா ஏற்பாடுகள் அருட்பணி. C. சகாயராஜ், பங்குத்தந்தை, இடைவிடா சகாய அன்னை ஆலயம், சின்னக் கொல்லப்பட்டி மற்றும் அருட்பணி. J. கிஷோர் இயக்குநர், மூவேந்தர் மேய்ப்புப் பணி நிலையம் அவர்களால் செய்யப்பட்டது; மேதகு முனைவர் அருள்செல்வம் இராயப்பன், சேலம் மறைமாவட்ட ஆயர் அவர்களால் 'மரியன்னையின் புகழ்பாடல் காட்டும் விடுதலை வாழ்வு' என்ற தலைப்பில் துவக்கவுரையானது நடைபெற்றது; அருட்பணி. முனைவர் டெரன்ஸ் சேவியர், பாளையம்கோட்டை அவர்களால் 'மரியாள் காட்டும் பெண்ணிய விடுதலை ஆன்மீகம்' என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது; அருட்சகோதரி முனைவர் தேவ பிரியா அவர்களால் 'அன்னையின் தலைமைத்துவம்' என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது; அருட்பணி. ஜெய் பெர்னார்ட் ஜோசப், பங்குத்தந்தை, சிலுவைகிரி அவர்களால் 'மரியியல் உண்மைகள்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது; அருட்பணி. ஸ்டான்லி குமார், பெங்களூர் அவர்களால் 'அன்னை காட்டும் இறைக்குடும்ப ஆன்மீகம்' என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது; பின்னர், அன்னைக்கோர் புகழ் அஞ்சலியாக சாட்சியங்கள் சொல்லப்பட்டது; இறுதியாக, 'அன்னை மரியாவின் வாழ்வு குணமளிக்கும் அருமருந்து' என்ற மையக்கருத்தில் திருப்பலியானது மேனாள் ஆயர் முனைவர். செ. சிங்கராயன் அவர்களால் நிறைவேற்றப்பட்டது; இம்மாநாட்டில் சவேரியார்பாளையம் மற்றும் பூமனூரைச் சார்ந்த அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 22/05/2024 புதன் கிழமை அன்று, மாலை 5 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திரு. வில்லியம் - திருமதி. பிரான்சிஸ்மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 9: 38-40. மாதா வணக்க மாதத்தையொட்டி, 31/05/2024 அன்று, சவேரியார்பாளையத்தில் நடைபெறும் சிறுதேர் பவனியில் பங்குபெறுவது மற்றும் அரசுப் பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு தருவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 22/05/2024 புதன் கிழமை அன்று, மதியம் 12 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. ஜெபமாலை - திருமதி. பிலோமினாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 9: 38-40. சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில், மாதா வணக்க மாதத்தையொட்டி, 31/05/2024 அன்று நடைபெறும் சிறுதேர் பவனியில் பங்குபெறுவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 20/05/2024 திங்கட் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், பாட்டன் தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திரு. வின்சென்ட் - திருமதி. பிரான்சிஸ் மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 4: 19: 25-27. மாதா வணக்க மாதத்தையொட்டி, 31/05/2024 அன்று, சவேரியார்பாளையத்தில் நடைபெறும் சிறுதேர் பவனியில் பங்குபெறுவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 19/05/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 4 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திருமதி. அன்னமேரி இன்னாசிமுத்து அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 15: 26-27; 16: 12-15. 26/05/2024-இல், மூவொரு கடவுள் பெருவிழா திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 19/05/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பிய இறைமக்களுடன், அனைத்து அன்பிய இறைமக்களும் இணைந்து 'தூய ஆவி பெருவிழா' திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர். திருப்பலிக்கு பிறகு, உதவி பங்குத் தந்தை அருட்பணி. அருள்வளன் அவர்களுக்கு பிரியாவிடை தரப்பட்டது.


    • 18/05/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 17/05/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 17/05/2024 வெள்ளிக் கிழமை அன்று, மதியம் 12 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பியக் கூட்டமானது, திரு. மரிய சகாயநாதன் - திருமதி. மரியா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 21 : 15 - 19. சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில், மாதா வணக்க மாதத்தையொட்டி, 31/05/2024 அன்று நடைபெறும் சிறுதேர் பவனியில் பங்குபெறுவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 16/05/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திரு. மதலைமுத்து - திருமதி. வின்சென்ட்மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 17: 20-26. வியாழன்தோறும் புனித வனத்து சின்னப்பர் கெபியில் ஜெபம் செய்ய முயற்சித்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 15/05/2024 புதன் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திரு. சக்கரியாஸ் - திருமதி. சகாயமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 17: 11-19. மரியன்னையின் வணக்க மாதமான இம்மேமாதத்தில், இல்லங்களில் ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 14/05/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 14/05/2024 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. ஜெயமாணிக்கம் - திருமதி. அருள்செல்வி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 15: 9-17. மரியன்னையின் வணக்க மாதமான இம்மேமாதத்தில், இல்லங்களில் ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 13/05/2024 திங்கட் கிழமை அன்று, கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திருமதி. கரோலின் மரியபிரகாசம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 16: 29-33. 24/05/2024 அன்று நடைபெறும் மரியன்னையின் மாநாட்டில் கலந்துக் கொள்ள முயற்சித்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 12/05/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, இயேசுவின் கண்மணிகள் மற்றும் நண்பர்கள் இணைந்து 'ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா' திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 11/05/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 10/05/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் கெபியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 05/05/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பியக் கூட்டமானது, திரு.செபஸ்தியான் - திருமதி. மரியசெல்வி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 15: 9-17. அன்பியத்திலுள்ள குடும்பங்கள், ஞாயிறு திருப்பலிகளில் தவறாமல் பங்கு கொள்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 05/05/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மரியாயின் சேனையினர் சீருடையில் வந்து, பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். திருப்பலிக்கு பிறகு, தொழிலாளரான புனித யோசேப்பு சிறுதேர் பவனியானது முன்னுரை, மன்றாட்டு மாலை மற்றும் பாடல்களுடன் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 04/05/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 03/05/2024 மாதத்தின் முதல் வெள்ளி அன்று, மாலை 6:30 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் திருப்பலியும், அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது; இறுதியில் நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 01/05/2024 புதன் கிழமை அன்று, காலை 9 மணிக்கு சவேரியார்பாளையத்திலும், மாலை 5 மணிக்கு சிலுவைபாளையத்திலும் கோடை விடுமுறை விவிலியப் பள்ளி (Vacation Bible School) வகுப்புகள் தொடங்கப்பட்டன; அனைத்து அன்பிய குழந்தைகள் பங்குபெற்றனர்.


    • 28/04/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, கொளத்தூர் புனித பவுலடியார் மற்றும் காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு மற்றும் புனித மான்ட்ஃபோர்ட் விழா திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 27/04/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 25/04/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில், சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு. அருள்செல்வம் இராயப்பன் D.D., DCL., அவர்களால், நம் பங்கில் பணிபுரிந்த திருத்தொண்டர்கள் T.ஸ்டீபன் ராஜ் மற்றும் P. பத்மகுமார் (எ) மைக்கேல் ராஜ் அவர்களுக்கு குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டது; இதில் சவேரியார்பாளையம் மற்றும் பூமனூரிலுள்ள அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 21/04/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் இணைந்து, பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறான 'இறையழைத்தல்' மற்றும் 'நல்லாயன் ஞாயிறு' திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 20/04/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 14/04/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை, கொளத்தூர் புனித பவுலடியார் அன்பிய இல்லங்களில் பாஸ்கா மந்திருப்பு செய்யப்பட்டது.


    • 14/04/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா மற்றும் கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள்இணைந்து, பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 13/04/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 11/04/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை, கொளத்தூர் புனித பவுலடியார் அன்பிய இல்லங்களில் பாஸ்கா மந்திருப்பு செய்யப்பட்டது.


    • 10/04/2024 புதன் கிழமை அன்று, மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா மற்றும் சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பிய இல்லங்களில் பாஸ்கா மந்திருப்பு செய்யப்பட்டது.


    • 09/04/2024 செவ்வாய்க் கிழமை அன்று, இரவு 7 மணி முதல் 8 மணி வரை, காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இல்லங்களில் பாஸ்கா மந்திருப்பு செய்யப்பட்டது.


    • 09/04/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் புனித அந்தோணியார் நவநாள் ஜெபம் வேண்டப்பட்டு, அதனைத் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 08/04/2024 திங்கட் கிழமை அன்று, மாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இல்லங்களில் பாஸ்கா மந்திருப்பு செய்யப்பட்டது.


    • 07/04/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இல்லங்களில் பாஸ்கா மந்திருப்பு செய்யப்பட்டது.


    • 07/04/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறுமான 'இறைஇரக்கத்தின் ஞாயிறு' திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 06/04/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 05/04/2024 மாதத்தின் முதல் வெள்ளி அன்று, மாலை 6:30 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் திருப்பலியும், அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது; இறுதியில் நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 04/04/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 4:45 மணி முதல் இரவு 8:15 மணி வரை, மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பிய இல்லங்களில் பாஸ்கா மந்திருப்பு செய்யப்பட்டது.


    • 03/04/2024 புதன் கிழமை அன்று, மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை, கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இல்லங்களில் பாஸ்கா மந்திருப்பு செய்யப்பட்டது.


    • 02/04/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 02/04/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு மற்றும் புனித இஞ்ஞாசியார் அன்பிய இல்லங்களில் பாஸ்கா மந்திருப்பு செய்யப்பட்டது.


    • 01/04/2024 திங்கட் கிழமை அன்று, மாலை 5:30 மணி முதல் இரவு 10 மணி வரை, சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பிய இல்லங்களில் பாஸ்கா மந்திருப்பு செய்யப்பட்டது.


    • 31/03/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பிய இறைமக்கள் இணைந்து, சுடரொளி பார்வையற்றோர் இல்லத்திற்கு, 1000லி தண்ணீர் தொட்டி அமைத்து தந்தனர்.


    • 31/03/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 8:30 மணியளவில், சவேரியார்பாளையம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில், 'ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு' பெருவிழா திருப்பலி அனைத்து அன்பிய இறைமக்களால் சிறப்பிக்கப்பட்டது; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 30/03/2024 சனிக் கிழமை அன்று, இரவு 11 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில், பாஸ்கா திருவிழிப்பு திருப்பலி அனைத்து அன்பிய இறைமக்களால் சிறப்பிக்கப்பட்டது; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 29/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மதியம் 3 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில், திருப்பாடுகளின் வெள்ளி திருப்பலி மற்றும் திருச்சிலுவை ஆராதனை உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. அருள்வளன் அவர்களால் நிறைவேற்றப்பட்டு, அனைத்து அன்பிய இறைமக்களால் சிறப்பிக்கப்பட்டது; இறைவார்த்தை வழிபாடு மற்றும் காணிக்கை பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 29/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மதியம் 2 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில், இயேசுவின் இறுதி ஏழு வார்த்தைகள் பற்றிய விளக்கவுரை, உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. அருள்வளன் அவர்களால் வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 29/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, காலை 9 மணி முதல் 10 மணி வரை, நற்கருணை பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்களால் ஆராதிக்கப்பட்டது; காலை 10 மணி முதல் 11 மணி வரை, நற்கருணை மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா மற்றும் கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்களால் ஆராதிக்கப்பட்டது; காலை 11 மணி மதியம் 12 மணி வரை, நற்கருணை கொளத்தூர் புனித பவுலடியார் மற்றும் காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்களால் ஆராதிக்கப்பட்டது; மதியம் 12 மணி முதல் 1 மணி வரை, நற்கருணை மரியாயின் சேனையினரால் ஆராதிக்கப்பட்டது; மதியம் 1 மணி முதல் 2 மணி வரை நற்கருணை பாடற்குழுவினரால் ஆராதிக்கப்பட்டது. அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 29/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மதியம் 1 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 29/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, காலை 9:30 மணியளவில், கொளத்தூர் நிர்மலா சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது. கொளத்தூர் புனித பவுலடியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 29/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, காலை 7 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் பெரிய சிலுவைப்பாதை, அருட்பணி. L. டேவிட், இயக்குநர், சேலம் சமூக சேவை மையம் அவர்களால் நடத்தப்பெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 28/03/2024 வியாழக் கிழமை அன்று, இரவு 7:30 மணி முதல் 9 மணி வரை, நற்கருணை அருட்பணியாளர் மற்றும் அனைத்து அன்பிய இறைமக்களால் ஆராதிக்கப்பட்டது; இரவு 9 மணி முதல் 10 மணி வரை, நற்கருணை சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பிய இறைமக்களால் ஆராதிக்கப்பட்டது; இரவு 10 மணி முதல் 11 மணி வரை, நற்கருணை சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பிய இறைமக்களால் ஆராதிக்கப்பட்டது; இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, நற்கருணை சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பிய இறைமக்களால் ஆராதிக்கப்பட்டது. அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 28/03/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், சவேரியார்பாளையம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில், 'ஆண்டவரின் இராவுணவு' திருப்பலியானது, பங்குத்தந்தை அருட்பணி. A. சிங்கராயன் அவர்களால் நிறைவேற்றப்பட்டு, அனைத்து அன்பிய இறைமக்களால் சிறப்பிக்கப்பட்டது; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்; காலடிகளைக் கழுவும் சடங்கும், நற்கருணை இடமாற்றப் பவனியும் நடைபெற்றது.


    • 24/03/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 7:30 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு கெபியிலிருந்து, புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் வரை 'குருத்தோலைப் பவனி'யானது நடைபெற்று, அருட்பணி. L. டேவிட், இயக்குநர், சேலம் சமூக சேவை மையம் அவர்களால் 'ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு' திருப்பலி நிறைவேற்றப்பட்டு, அனைத்து அன்பிய இறைமக்களால் சிறப்பிக்கப்பட்டது; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 23/03/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 22/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், கொளத்தூர் நிர்மலா சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; கொளத்தூர் புனித பவுலடியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 22/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய முன்னெடுப்பில், கூழ்கரட்டில் தவக்கால சிலுவைப் பயணம் மற்றும் சிலுவைப் பாதை நடைபெற்று, அருட்பணி. லூக்காஸ் OFM Cap. அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர். இறுதியில் அன்பின் உணவு வழங்கப்பட்டது.


    • 22/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சிலுவைப்பாதையும், அதனைத் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 21/03/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், பக்கிரிக்காடு மற்றும் சிலுவைபாளைய அன்பிய இறைமக்களுக்காக சிலுவைப்பாதை நடைபெற்றது; பிறகு, புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 20/03/2024 புதன் கிழமை அன்று, மரியாயின் சேனையினர் முன்னெடுப்பில், சவேரியார்பாளையம் மற்றும் பூமனூரிலுள்ள அனைத்து அன்பிய இறைமக்களும், கோவை மறைமாவட்டத்திலுள்ள 9 ஆலயங்களுக்கு தவக்காலத் திருப்பயணம் சென்றனர்.


    • 19/03/2024 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வளாகத்தில், புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழாவை ஒட்டி, புனித யோசேப்பின் சிறு தேர் பவனி நடைபெற்று, பெருவிழா திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 18/03/2024 திங்கட் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியக் கூட்டமானது, திருமதி. மரியம்மாள் - இராயப்பன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 8 : 1-11. 22/03/2024 அன்று, கூழ்கரட்டில் நடைபெறும், தவக்கால சிலுவைப் பயணம் மற்றும் சிலுவைப் பாதையில் பங்குபெறுவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 17/03/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 9 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் தவக்கால உபவாச தியானம் மற்றும் நற்கருணை ஆசிர் அருட்பணி. ஹென்றி கிஷோர் அவர்களால் வழங்கப்பட்டு, திருப்பலி நிறைவேற்றப்பட்டது; புனித சவேரியார் அன்பிய இறைமக்களால் திருப்பலி சிறப்பிக்கப்பட்டது.


    • 16/03/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் இறைவேண்டல் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 15/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், கொளத்தூர் நிர்மலா சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; கொளத்தூர் புனித பவுலடியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 15/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 15/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் கெபியில், சிலுவைப்பாதை நடைபெற்றது; கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 15/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 15/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சிலுவைப்பாதையும், அதனைத் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 14/03/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திரு.கிளாரான்ஸ் - திருமதி. மேரி சித்ரா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 5: 31-47. 17/03/2024 அன்று நமது பங்கில் நடைபெறும், தவக்கால உபவாச தியானத்தில் கலந்து கொள்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 13/03/2024 புதன் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திரு. செல்வராஜ் - திருமதி. சூசைமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 5: 17-30. 22/03/2024 அன்று, நமது கூழ்கரட்டில் நடைபெறும், தவக்கால சிலுவைப் பயணம் மற்றும் சிலுவைப் பாதை சிறப்பாக நடைபெற உதவுதல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 12/03/2024 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் சிலுவைப்பாதையும், அதனைத் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 12/03/2024 செய்வாய்க் கிழமை அன்று, மதியம் 1 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு.செல்வராஜ் - திருமதி. லில்லிபுஷ்பம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 5: 1-16. 17/03/2024 அன்று நமது பங்கில் நடைபெறும், தவக்கால உபவாச தியானத்தில் கலந்து கொள்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 11/03/2024 திங்கட் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திரு.ஜோசப் - திருமதி. புஷ்பமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 4: 43-54. 17/03/2024-இல், ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 10/03/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திரு. அருள் ஜெயசீலன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 3: 14-21. சுடரொளி பார்வையற்றோர் இல்லத்திற்கு, தண்ணீர் தொட்டி அமைத்து தருதல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 10/03/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பியக் கூட்டமானது, திரு.திவ்யநாதன் - திருமதி. சவரியம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 3: 14-21. அன்பியத்திலுள்ள குடும்பங்கள், ஞாயிறு திருப்பலிகளில் தவறாமல் பங்கு கொள்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 10/03/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மதியம் 12:30 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பிய இறைமக்கள் இணைந்து, சுடரொளி பார்வையற்றோர் இல்லத்திற்கு மதிய உணவை தயாரித்து எடுத்துச் சென்று, பரிமாறினர்.


    • 10/03/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மதியம் 12 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திரு.சவேரியார் (எ) சவரியப்பன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 3: 14-21. இத்தவக்காலத்தில், அன்பிய குடும்பங்களில் சிலுவைப் பாதையை அன்பியமாக தியானிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 10/03/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 7:45 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு கெபியிலிருந்து, புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் வரை அனைத்து அன்பிய மகளிரும் பங்குகொண்ட 'மகளிர் தின' பேரணியானது, பதாகைகள் ஏந்தியும், முழக்கமிட்டும் நடைபெற்று, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பிய இறைமக்களால் திருப்பலி சிறப்பிக்கப்பட்டது; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 09/03/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 08/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், கொளத்தூர் நிர்மலா சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; கொளத்தூர் புனித பவுலடியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 08/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 08/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் கெபியில், சிலுவைப்பாதை நடைபெற்றது; கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 08/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 08/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சிலுவைப்பாதையும், அதனைத் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 05/03/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 05/03/2024 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. செல்வராஜ் - திருமதி. நிர்மலா மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 18: 21-35. 17/03/2024 அன்று நமது பங்கில் நடைபெறும், தவக்கால உபவாச தியானத்தில் கலந்து கொள்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 04/03/2024 திங்கட் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திருமதி. பவுலினா மேரி - தோம்னிக் சாவியோ அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 4: 24-30. 17/03/2024 அன்று நமது பங்கில் நடைபெறும், தவக்கால உபவாச தியானத்தில் கலந்து கொள்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 03/03/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, இயேசுவின் கண்மணிகள் மற்றும் நண்பர்கள் இணைந்து 'மனித நேயத்தில் சகோதரத்துவம், அனைவருடனும் ஒன்றிணைந்து' என்ற மையக்கருத்தில் பசி, பிணி ஒழிப்பு ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 02/03/2024சனிக் கிழமை அன்று, காலை 9:30 மணிக்கு, மேட்டூர் மறைவட்ட பொது சிலுவைப் பயணம் பூமனூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்திலிருந்து தொடங்கி, பெரியநாயகி அன்னை திருத்தலம் வரை நடைபெற்று, பொது சிலுவைப் பாதையானது தியானிக்கப்பட்டது; மதியம் 12 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர். இறுதியில் அன்பின் உணவு வழங்கப்பட்டது.


    • 02/03/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 01/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், கொளத்தூர் நிர்மலா சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; கொளத்தூர் புனித பவுலடியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 01/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 01/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் கெபியில், சிலுவைப்பாதை நடைபெற்றது; கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 01/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 01/03/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சிலுவைப்பாதையும், அதனைத் தொடர்ந்து திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது; இறுதியில் நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 28/02/2024 புதன் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சவேரியார்பாளையம் பங்குத்தந்தை இல்லத்தில், பங்குத்தந்தை அருட்பணி. சிங்கராயன் தலைமையில் நடைபெற்ற மேய்ப்புப்பணி பேரவை(பங்கு பேரவை) கூட்டத்தில், அனைத்து அன்பிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். தவக்காலத்தில் நடைபெறும் சிலுவைப் பயணங்கள், புனித வாரத் திருவழிபாடுகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.


    • 27/02/2024 செய்வாய்க் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, திருமதி. சகாயமேரி அவர்களின் இல்லத்தில், அவரது நோய் நீங்கி குணமடைய, செபம் செய்தனர்.


    • 25/02/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திரு.மதலைமுத்து - திருமதி. செல்வ இரஞ்சித மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 9: 2-10. 02/03/2024-இல், நடைபெறும் மேட்டூர் மறைவட்ட பொது சிலுவைப்பாதையில் கலந்து கொள்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 25/02/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 10 மணியளவில், சேலம், குழந்தை இயேசு பேராலய வளாகத்திலுள்ள அன்னை இல்லத்தில், அருட்பணி. அமல் மகிமை ராஜ் தலைமையிலான சேலம் மறைமாவட்ட அன்பியப் பணிக்குழுவின் முன்னெடுப்பில் புனித அல்போன்ஸா மண்டல (சேலம், ஊட்டி, கோவை, தர்மபுரி) அன்பிய கருத்தரங்கானது நடைபெற்றது; தமிழக அன்பியப் பணிக்குழு செயலர் அருட்பணி. ஜான் போஸ்கோ அவர்கள் 'சமூக அக்கறையுடன் அடித்தள திருஅவை - அன்பியம்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்; 'இந்திய ஜனநாயகம் சந்திக்கும் சவாலும் - அன்பியத்தின் பதிலிறுப்பும்' என்ற தலைப்பில் அருட்பணி. ஜெய் பெர்னார்ட் ஜோசப் அவர்கள் கருத்துரை வழங்கினார்; பிறகு, சேலம் மறைமாவட்ட முதன்மைகுரு பேரருட்திரு. மைக்கேல் ராஜ் செல்வம் அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சவேரியார்பாளையம் மற்றும் பூமனூரைச் சேர்ந்த அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அன்பியப் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.


    • 25/02/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மரியாயின் சேனையினர் சீருடையில் வந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 24/02/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 24/02/2024 சனிக் கிழமை அன்று, காலை 10 மணியளவில், சேலம், குழந்தை இயேசு பேராலய வளாகத்திலுள்ள அன்னை இல்லத்தில், யூபிலி 2025-ம் ஆண்டிற்கான முன்தயாரிப்பு பணியாக, அகில இந்திய திருஅவையின் யூபிலி 2025-க்கான இந்திய ஒருங்கிணைப்பாளர் அருட்பணி. இயேசு கருணாநிதி அவர்கள் கருத்துரை வழங்கினார்; இந்த நிகழ்வினை சேலம் மறைமாவட்ட யூபிலி 2025-க்கான ஒருங்கிணைப்பாளர் அருட்பணி. ஜெய் பெர்னார்ட் ஜோசப் அவர்கள் ஏற்பாடு செய்தார்; இதில் மேட்டூர் மறைவட்ட முதன்மைகுரு, சவேரியார்பாளையம் மேய்ப்புப்பணி பேரவை உறுப்பினர்கள், செயலர் மற்றும் அன்பிய ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.


    • 23/02/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், கொளத்தூர் நிர்மலா சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; கொளத்தூர் புனித பவுலடியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 23/02/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 23/02/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் கெபியில், சிலுவைப்பாதை நடைபெற்றது; கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 23/02/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 23/02/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சிலுவைப்பாதையும், அதனைத் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 22/02/2024 வியாழக் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியக் கூட்டமானது, திரு. ஏசுதாஸ் - திருமதி. பாலமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 16 : 13-19. சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் நடைபெறும் சிலுவைப்பாதையில் அனைவரும் தவறாமல் பங்குபெறுவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 21/02/2024 புதன் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திரு. ஆரோக்கியசாமி - திருமதி. அல்போன்ஸா மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 11: 29-32. 22/03/2024 அன்று கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் கெபியில் நடைபெறும் சிலுவைப்பாதையில் அனைவரும் தவறாமல் பங்குபெறுவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 20/02/2024 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திரு. பன்னீர் செல்வம் - திருமதி. லில்லி பவுலின் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 6: 7-15. இத்தவக்காலத்தில், நடைபெறும் சிலுவைப்பாதையில் தவறாமல் பங்குபெறுவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 19/02/2024 திங்கட் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திரு. ஞான பிரகாசம் - திருமதி. மோட்சராக்கினி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 25: 31-46. 17/03/2024 அன்று நமது பங்கில் நடைபெறும், தவக்கால உபவாச தியானத்தில் கலந்து கொள்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 18/02/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திருமதி. லீமா மார்செலின் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 1: 12-15. இத்தவக்காலத்தில், தானம் செய்தலை முதன்மைப்படுத்துதல், சுடரொளி பார்வையற்றோர் இல்லத்திற்கு, அன்பியமாகச் சென்று ஒருவேளை உணவு வழங்குதல் மற்றும் ஆறுதலாக ஜெபித்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 18/02/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பியக் கூட்டமானது, திரு.சவரியப்பன் - திருமதி. சகாய மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 1: 12-15. அன்பியத்திலுள்ள குடும்பங்கள் மனஸ்தாபங்களை களைந்து, சமாதானமாக வாழ முயற்சி எடுத்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 18/02/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, கொளத்தூர் புனித பவுலடியார் மற்றும் காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்; திருப்பாலத்துவ சபை சிறப்பு காணிக்கையானது எடுக்கப்பட்டது.


    • 17/02/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 16/02/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், கொளத்தூர் நிர்மலா சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; கொளத்தூர் புனித பவுலடியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 16/02/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 16/02/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சிலுவைப்பாதையும், அதனைத் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 16/02/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் கெபியில், சிலுவைப்பாதை நடைபெற்றது; கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 16/02/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் சிலுவைப்பாதை நடைபெற்றது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 14/02/2024 புதன் கிழமை அன்று, காலை 7 மணியளவில், அனைத்து அன்பிய இறைமக்களும் இணைந்து, திருநீற்றுப் புதன் திருப்பலியை சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். அனைத்து அன்பிய இறைமக்களுக்கும் தவக்கால தானப் பையானது வழங்கப்பட்டு, ஒரு நாளைக்கு, ஒரு கைப்பிடி அரிசியாவது தானம் செய்ய வலியுறுத்தப்பட்டது.


    • 13/02/2024 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. ஜெயபிரகாஷ் - திருமதி. அந்தோணியம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 8: 14-21. 18/02/2024-இல், ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 12/02/2024 திங்கட் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு.செபஸ்தியான் - திருமதி. நிர்மலா ரோஸி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 8: 11-13. வருகின்ற தவக்காலத்தில் நடைபெறும் சிலுவைப்பாதையில் தவறாமல் பங்குபெறுவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 11/02/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திரு.செபஸ்தியான் - திருமதி. சிந்தாமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 1: 40-45. வருகின்ற தவக்காலத்தில் நடைபெறும் சிலுவைப்பாதையில் தவறாமல் பங்குபெறுவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 11/02/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மற்றும் காணிக்கை பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 10/02/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 06/02/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 04/02/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா மற்றும் கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 02/02/2024 மாதத்தின் முதல் வெள்ளி அன்று, காலை 6:30 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் திருப்பலியும், அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது; இறுதியில் நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 28/01/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திரு.செபாஸ்டின் - திருமதி. ரோஸாலிமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 1: 21-28. 04/02/2024-இல், ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 28/01/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, 'மானிடம் வளர்ப்பதே மாந்தர் அனைவரின் வாழ்வியல் நெறியாகிட' என்ற மையக்கருத்தில் ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 27/01/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 27, 28/01/2024 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், தமிழக அன்பியப் பணிக்குழு நடத்திய மறைமாவட்ட அன்பிய வழிகாட்டிகளுக்கானப் பயிற்சி, திண்டிவனம் தமிழக முப்பணி மையத்தில் நடைபெற்றது; அதில் சவேரியார்பாளையம் அன்பிய ஒருங்கிணைப்பாளர் பங்குபெற்றார்.


    • 25/01/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பியக் கூட்டமானது, திரு. சவுரியப்பன் - திருமதி. செல்வமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 16: 15-18. அன்பியத்திலுள்ள பிரிந்து வாழும் தம்பதியினரை சந்தித்து, சேர்ந்து வாழ முயற்சி செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 25/01/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திரு. இயேசுராஜ் - திருமதி. ஆனிஇசபெல்லா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 1: 14-20. அன்பிய திருப்பலிகளைச் சிறப்பிக்கும்போதும், சனிக்கிழமை நவநாள் திருப்பலிகளிலும் அனைவரும் தவறாமல் பங்கேற்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 23/01/2024செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, புனித பதுவை அந்தோணியார் சிற்றாலய வளாகத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 3: 31-35. வருகின்ற தவக்காலத்தில் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் நடைபெறும் சிலுவைப்பாதையில் தவறாமல் பங்குபெறுவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 21/01/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, 'கிறிஸ்துவ ஒன்றிப்பு வாரம்' மற்றும் 'புவியைக் காப்பதில் முன்னோடியாகத் திருஅவை' என்ற மையக்கருத்தில் ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். 'இயற்கையோடு இணைந்து இறைவனை போற்றிட' என்ற அன்பிய மாதத்தின் மையக்கருத்திற்கேற்ப ஆலய வளாகத்தில் நடவு செய்வதற்கு சில மரக்கன்றுகளை காணிக்கைகளாக வழங்கினர்.


    • 20/01/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 19/01/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திரு. செபஸ்தியான் - திருமதி. ரெஜினா மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 3: 13-19. 04/02/2024-இல், ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 18/01/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், பக்கிரிக்காடு பகுதியிலுள்ள கால்நடைகள் மந்திரிக்கப்பட்டு, பின்னர் சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் தேர் திருவிழா திருப்பலியானது சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்களால் சிறப்பிக்கப்பட்டது; பிறகு, வேண்டுதல் தேர் பவனி, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று, அன்பின் உணவு வழங்கப்பட்டது; இறுதியில் பெரிய தேர் பவனியானது ஊரைச் சுற்றி எடுத்து வரப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கு கொண்டனர்.


    • 17/01/2024 புதன் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்களுடன் இணைந்து பிற அன்பிய இறைமக்களும் பங்கு கொண்டனர்.


    • 16/01/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் தேர் திருவிழாவையொட்டி, கொடியானது ஆலய வளாகத்தைச் சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டு, கொடியேற்றப்பட்டது; பிறகு, திருப்பலியானது சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்களால் சிறப்பிக்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கு கொண்டனர்.


    • 16/01/2024 செவ்வாய்க் கிழமை அன்று, காலை 11 மணியளவில், மோளப்பாறையூர் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் புனித வனத்து அந்தோணியார் தேர் திருவிழா திருப்பலியானது மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பிய இறைமக்களால் சிறப்பிக்கப்பட்டது; பிறகு, வேண்டுதல் தேர் பவனி நடைபெற்று, இறுதியில் அன்பின் உணவு வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கு கொண்டனர்.


    • 15/01/2024 திங்கட் கிழமை அன்று, காலை 11 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் தேர் திருவிழா திருப்பலியானது கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்களால் சிறப்பிக்கப்பட்டது; பிறகு, வேண்டுதல் தேர் பவனி, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று, இறுதியில் அன்பின் உணவு வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கு கொண்டனர்.


    • 14/01/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பியக் கூட்டமானது, திரு.பவுல்ராஜ் - திருமதி. பாத்திமா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 1: 35-42. இயற்கையோடு இணைந்து இறைவனை போற்றிட என்ற அன்பிய மாதத்தின் மையக்கருத்திற்கேற்ப ஆலய வளாகத்தில் சில மரக்கன்றுகளை நடவு செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 14/01/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, மதியம் 1 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திரு.செபஸ்தியான் - திருமதி. சூசைமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 1: 35-42. வருகின்ற தவக்காலத்தில் நடைபெறும் சிலுவைப்பாதையில் தவறாமல் பங்குபெறுவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 14/01/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பிய இறைமக்கள் இணைந்து, 'மானிடநேயம் உலகின் பொதுச் சமயமாகிட' என்ற மையக்கருத்தில் ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 13/01/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 12/01/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திரு. அகஸ்டின் ஜோசப் - திருமதி. இருதய மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 2: 1-12. 18/02/2024-இல், ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 12/01/2024 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் கெபியில், நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டு, நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்களுடன் இணைந்து பிற அன்பிய இறைமக்களும் பங்கு கொண்டனர்.


    • 11/01/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் தேர் திருவிழாவையொட்டி, கொடியானது கெபியைச் சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டு, திருப்பலிக்குப் பின், கொடியேற்றப்பட்டது; கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்களுடன் இணைந்து பிற அன்பிய இறைமக்களும் பங்கு கொண்டனர்.


    • 11/01/2024 வியாழக் கிழமை அன்று, மாலை 5 மணியளவில், பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திருமதி. சகாயமேரி மதலைமுத்து அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 1: 40-45. நமது கிளைப்பங்கிலுள்ள தேர் திருவிழாக்களில் பங்கெடுப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 09/01/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு.யாக்கோபு - திருமதி. அந்தோணியம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மாற்கு 1: 21-28. 18/01/2024-இல் தேர் திருவிழா திருப்பலியைச் சிறப்பான முறையில் வழிநடத்துவது மற்றும் தேர் திருவிழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 07/01/2024 அன்பிய மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை அன்று, 2025 யூபிலி ஆண்டிற்கான கொடியேற்றப்பட்டு, புதிய இலச்சினை மற்றும் ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற மையக்கருத்து பற்றி விளக்கம் தரப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் இணைந்து யூபிலி ஜெபத்தை ஜெபித்தனர்; கொளத்தூர் புனித பவுலடியார் மற்றும் காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, 'பூமிப் பந்து - உயிர்கள் அனைத்தின் பொது வீடு' என்ற மையக்கருத்தில் ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 06/01/2024 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 05/01/2024 மாதத்தின் முதல் வெள்ளி அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் திருப்பலியும், அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது; இறுதியில் நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 02/01/2024 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 01/01/2024 திங்கட் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், நற்கருணை ஆராதனை நடைபெற்று, ஆசீர் வழங்கப்பட்டது; பிறகு, புத்தாண்டையொட்டி குழந்தைகளின் குழு நடனம், பெண்களின் கும்மியாட்டம் மற்றும் கோலாட்டம் போன்ற பல்சுவை கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசு குலுக்கல் நடைபெற்றது. பங்கு தந்தை சந்திப்பும் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்து கொண்டு மகிழ்ந்தினர்.


    • 01/01/2024 திங்கட் கிழமை அன்று, காலை 8:30 மணியளவில், அனைத்து அன்பிய இறைமக்களும் இணைந்து, இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா திருப்பலியை சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


  • 2023 (124)
    • 31/12/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, இரவு 11:30 மணியளவில், இயேசுவின் கண்மணிகள் மற்றும் நண்பர்கள் இணைந்து சிறப்பித்த இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா திருப்பலியானது நடைபெற்றது; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 31/12/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, இரவு 10:30 மணியளவில், இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி கூறியும், நாம் செய்த தவறுகளுக்கு மனம் வருந்தியும் வழிபாடானது நடைபெற்று, நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 31/12/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 8 மணியளவில், அனைத்து அன்பிய இறைமக்களும் இணைந்து, திருக்குடும்ப விழா திருப்பலியை சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 30/12/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 28/12/2023 வியாழக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர் விழா திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 28/12/2023 வியாழக் கிழமை அன்று, புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர் விழாவையொட்டி, காலை 10 மணியளவில், சேலம் கேம்ப் பேருந்து நிறுத்தத்திலிருந்து, புனித பிலோமினாள் நடுநிலைப் பள்ளி வரை, மேட்டூர் மறைவட்ட குழந்தைகள் கைகளில் வத்திக்கான் கொடிகளுடன் பங்கு பெற்ற பேரணி நடைபெற்றது; பிறகு, வத்திக்கான் கொடியேற்றப்பட்டு மறைக்கல்வி மாணவர்களுக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேற்கொண்டு, அனைத்து மறைவட்ட பங்குகளின் கலைநிகழ்ச்சிகளான ஆடல், பாடல், நாடகம், மௌனமொழி நாடகம் போன்றவை புனித வளனார் சமுதாயக்கூடத்தில் பெரும் மகிழ்ச்சியோடு நடைபெற்றது; சவேரியார்பாளையம் மற்றும் பூமனூரிலிருந்து அனைத்து அன்பியங்களைச் சார்ந்த குழந்தைகள் 59பேர் பங்கு பெற்றனர்; இறுதியில் அன்பின் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.


    • 25/12/2023 திங்கட் கிழமை அன்று, காலை 8:30 மணியளவில், அனைத்து அன்பிய இறைமக்களும் இணைந்து, கிறிஸ்து பிறப்பு பகல் திருப்பலியை சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 24/12/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, இரவு 11:30 மணியளவில், அனைத்து அன்பிய இறைமக்களும் இணைந்து, கிறிஸ்து பிறப்பு இரவு திருப்பலியை சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 24/12/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 8 மணியளவில், சவேரியார்பாளையம் பங்கிலுள்ள அனைத்து அன்பியப் பொறுப்பாளர்கள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 23/12/2023 சனிக் கிழமை அன்று, காலை 6:30 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 20/12/2023 புதன் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், பாலகன் இயேசு, கிறிஸ்துமஸ் தாத்தாக்கள், அருட்பணியாளர்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் பாடல் குழுவானது, கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியங்களில் உள்ள இல்லங்களுக்கு சென்று, கிறிஸ்து பிறப்பு நற்செய்தியை அறிவித்தனர்; அனைத்து அன்பிய இறைமக்களும் பெருமகிழ்வுடன் கலந்துக் கொண்டனர்.


    • 19/12/2023 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், பாலகன் இயேசு, கிறிஸ்துமஸ் தாத்தாக்கள், அருட்பணியாளர்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் பாடல் குழுவானது, கொளத்தூர் புனித பவுலடியார் மற்றும் காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியங்களில் உள்ள இல்லங்களுக்கு சென்று, கிறிஸ்து பிறப்பு நற்செய்தியை அறிவித்தனர்; அனைத்து அன்பிய இறைமக்களும் பெருமகிழ்வுடன் கலந்துக் கொண்டனர்.


    • 18/12/2023 திங்கட் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், பாலகன் இயேசு, கிறிஸ்துமஸ் தாத்தாக்கள், அருட்பணியாளர்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் பாடல் குழுவானது, கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியங்களில் உள்ள இல்லங்களுக்கு சென்று, கிறிஸ்து பிறப்பு நற்செய்தியை அறிவித்தனர்; அனைத்து அன்பிய இறைமக்களும் பெருமகிழ்வுடன் கலந்துக் கொண்டனர்.


    • 17/12/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், பாலகன் இயேசு, மரியா, யோசேப்பு, கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் பாடல் குழுவானது, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு, புனித சவேரியார் மற்றும் புனித இஞ்ஞாசியார் அன்பியங்களில் உள்ள இல்லங்களுக்கு சென்று, கிறிஸ்து பிறப்பு நற்செய்தியை அறிவித்தனர்; அனைத்து அன்பிய இறைமக்களும் பெருமகிழ்வுடன் கலந்துக் கொண்டனர்.


    • 17/12/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மற்றும் காணிக்கை பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 16/12/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், பாலகன் இயேசு, கிறிஸ்துமஸ் தாத்தாக்கள், அருட்பணியாளர்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் பாடல் குழுவானது, பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியங்களில் உள்ள இல்லங்களுக்கு சென்று, நற்செய்தியை அறிவித்தனர். பூமனூர் இறைமக்கள் ஆர்வமுடன் பங்கு பெற்று சிறப்பித்தனர்.


    • 16/12/2023 சனிக் கிழமை அன்று, காலை 6:30 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 15/12/2023 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், பாலகன் இயேசு, கிறிஸ்துமஸ் தாத்தாக்கள், அருட்பணியாளர்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் பாடல் குழுவானது, மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியங்களில் உள்ள இல்லங்களுக்கு சென்று, கிறிஸ்து பிறப்பு நற்செய்தியை அறிவித்தனர். பூமனூர் இறைமக்கள் ஆர்வமுடன் பங்கு பெற்று சிறப்பித்தனர்.


    • 10/12/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, திருப்பலிக்குப் பிறகு, சவேரியார்பாளையம் பங்குத்தந்தை இல்லத்தில், பங்குத்தந்தை அருட்பணி. சிங்கராயன் தலைமையில் நடைபெற்ற மேய்ப்புப்பணி பேரவை(பங்கு பேரவை) கூட்டத்தில், அனைத்து அன்பிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பாடல் குழு செல்லும் இடங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் கிளைப் பங்கு தேர் திருவிழா நாட்கள் முடிவு செய்யப்பட்டன; மேலும், இம்மாதத்தில் அன்பியங்களை நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.


    • 10/12/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா மற்றும் கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 09/12/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 08/12/2023 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வளாகத்தில், தூய கன்னி மரியாவின் அமலோற்பவ பெருவிழாவை ஒட்டி, தூய கன்னி மரியாவின் சிறு தேர் பவனி, ஜெபமாலை, மன்றாட்டு மாலை ஆகியவை நடைபெற்று, பெருவிழா திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது; மரியாயின் சேனையினர் திருப்பலியை சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர். இறுதியில், அன்பு உணவாக பொங்கல் வழங்கப்பட்டது.


    • 08/12/2023 வெள்ளிக் கிழமை அன்று, மதியம் 12 மணிக்கு, மரியாயின் சேனையினர் முன்னெடுப்பில், அருள் தரும் அன்னை தந்த வாக்குறுதியின்படி 1 மணி நேரம் அருளின் நேரமானது அனுசரிக்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 05/12/2023 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 05/12/2023 செய்வாய்க்கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. ஜெயமாணிக்கம் - திருமதி. அருள்செல்வி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 10: 21-24. வருகின்ற கிறிஸ்து பிறப்பு திருவிழிப்புத் திருப்பலியில் தவறாமல் பங்கெடுப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 04/12/2023 திங்கட் கிழமை அன்று, காலை 7 மணியளவில், பங்கு தேர்த்திருவிழா நன்றித் திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 03/12/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, இரவு 9 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர் பவனியானது நடைபெற தொடங்கியது. முதலாவதாக, அதிதூதர் மிக்கேல் தேரானது புறப்பட்டது; அத்தேரினை, சவேரியார்பாளையம் புனித சவேரியார், கொளத்தூர் புனித பவுலடியார் மற்றும் காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியத்தினர் அலங்கரித்தனர்; இரண்டாவதாக, புனித செபஸ்தியார் தேரானது புறப்பட்டது; அத்தேரினை, சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் மற்றும் மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியத்தினர் அலங்கரித்தனர். மூன்றாவதாக, புனித பிரான்சிஸ் சவேரியார் தேரானது புறப்பட்டது; அத்தேரினை, சவேரியார்பாளையம் இயேசுவின் நண்பர்கள் அலங்கரித்தனர்; நான்காவதாக, புனித சந்தியாகப்பர்(St.George) தேரானது புறப்பட்டது; அத்தேரினை, பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியத்தினர் அலங்கரித்தனர்; ஐந்தாவதாக, அன்னை மரி தேரானது புறப்பட்டது; அத்தேரினை, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு மற்றும் கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியத்தினர் அலங்கரித்தனர்.


    • 03/12/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் வேண்டுதல் தேரானது இயேசுவின் கண்மணிகள் மற்றும் நண்பர்கள் பொறுப்பில் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும், வெளியூரைச் சேர்ந்த புனித சவேரியாரின் அன்பு பக்தர்களும் புனிதருக்கு வணக்கத்தை செலுத்தினர்.


    • 03/12/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 9 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா திருப்பலி அருட்பணி. லூக்காஸ் OFM Cap. அவர்கள் தலைமையில் நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் இணைந்து, திருவிழா திருப்பலியை சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 02/12/2023 சனிக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், சவேரியார்பாளையத்திற்கு வருகை புரிந்த பேரருட்திரு. ஆயர் அருள்செல்வம் இராயப்பன் அவர்களுக்கு பங்கின் சார்பாக சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. சேலம் மறைமாவட்ட ஆயர் மற்றும் மேட்டூர் மறைவட்ட குருக்கள் தலைமையில், முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்று, குழந்தைகளுக்கு நற்கருணை என்ற திருவருட்சாதனம் அருளப்பட்டது. பிறகு, நடைபெற்ற குருக்கள் சந்திப்பில், அன்பு ஆயருக்கு அனைத்து அன்பியங்களின் சார்பாக காணிக்கை, வரவேற்புரை, பொன்னாடை அணிவித்தல் மற்றும் இறைவார்த்தையை ஒலியில் தந்தவருக்கு வார்த்தைகளால் ஒரு வாழ்த்து மடலும் வாசிக்கப்பட்டு, வழங்கப்பட்டது; ஆயரின் ஆசிர் உரையுடன், விழா இனிதே நிறைவுற்றது.


    • 01/12/2023 வெள்ளிக் கிழமை அன்று, இரவு 8 மணியளவில், 26/11/2023 - இல் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பல்சுவை கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசு குலுக்கல் நடைபெற்றது. தமிழர் நாட்டார் கலைகளான கும்மியாட்டம் மற்றும் கோலாட்டம் இடம்பெற்று, அனைவரையும் கவர்ந்தது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்து கொண்டு மகிழ்ந்தினர். பிறகு, அரசு ஊழியர்களின் சார்பாக, அன்பு உணவு வழங்கப்பட்டது.


    • 01/12/2023 மாதத்தின் முதல் வெள்ளி அன்று, மாலை 6 மணியளவில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில், மேட்டூர் பங்குத்தந்தை அருட்பணி. இருதய செல்வம் அவர்களால் நற்கருணை ஆராதனையும், ஆசிரும் வழங்கப்பட்டது; சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 30/11/2023 வியாழக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் மற்றும் குழந்தை இயேசு அன்பிய இறைமக்கள் இணைந்து, புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா நவநாள் மற்றும் புனித அந்திரேயா, திருத்தூதர் திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 29/11/2023 புதன் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா மற்றும் கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் இணைந்து, புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு மற்றும் காணிக்கை பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்; திருப்பலிக்குப் பிறகு, அன்பின் உணவை வழங்கினர்.


    • 28/11/2023 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கொளத்தூர் புனித பவுலடியார் மற்றும் காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாட்டை வழிநடத்தினர்.


    • 27/11/2023 திங்கட் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பிய இறைமக்கள் ஒன்றிணைந்து, புனித சந்தியாகப்பர் (St.Gerorge) சுரூப பவனியானது சிலுவைப்பாளையத்திலிருந்து ஜெபமாலை ஜெபித்தலுடன் புறப்பட்டு, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு கெபியிலிருந்து புனித சந்தியாகப்பர் புகழ் பா உடன், ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டு, திரு. பத்திநாதன் - திருமதி. பார்பாரம்மாள், திரு. அந்தோணி மரியமைக்கேல் அவர்களின் குடும்பத்தினரால் ஆலயத்திற்கு காணிக்கையாக தரப்பட்டது. பிறகு, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியம், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியம் மற்றும் பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா அன்பிய இறைமக்கள் இணைந்து, தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் காணிக்கை பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 26/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, இரவு 6:30 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திரு. அருளப்பன் - திருமதி. தெரசம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 25: 31-46. 01/12/2023-இல் தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பான முறையில் வழிநடத்துவது மற்றும் தேர் திருவிழாவிற்கு இயன்ற உதவிகளை செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 26/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் பங்கிலுள்ள அனைத்து அன்பிய இறைமக்களும் இணைந்து, பங்கு திருவிழா கொடியேற்ற திருப்பலியைச் சிறப்பித்தனர். மங்கள ஆரத்தி, இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மற்றும் தீப, தூப, மலரஞ்சலி ஆகியவற்றை வழிநடத்தினர்; பின்னர், மான்ஃபோர்ட் அருட்சகோதரர் கிரசென்சியுஸ் அவர்களால் புனித சவேரியார் திருகொடியானது மந்திரிக்கப்பட்டு, ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்துவரப்பட்டு, அருட்சகோதரர் கிரசென்சியுஸ் அவர்களால் கொடியேற்றப்பட்டது. பின்னர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அனைத்து அன்பிய இறைமக்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


    • 25/11/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 19/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திரு. ஹல்மான் ராபின் ரோமியோ - திருமதி. பெல்சி ஹெலன் மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 25: 14-30. வருகின்ற பங்கு தேர் திருவிழாவையொட்டி, அன்பியமாக இணைந்து தேர் நவநாள் திருப்பலியைச் சிறப்பித்தல் மற்றும் தேர் ஜோடித்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 19/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திரு. திவ்யநாதன் - திருமதி. இராதாமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 25: 14-30. இம்மாதத்தில் ஒருநாள், அன்பியமாகச் சென்று, கல்லறைகளை சந்தித்து செபம் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 19/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் பங்குத்தந்தை இல்லத்தில், பங்குத்தந்தை அருட்பணி. சிங்கராயன் தலைமையில் நடைபெற்ற மேய்ப்புப்பணி பேரவை(பங்கு பேரவை) கூட்டத்தில், அனைத்து அன்பிய பொறுப்பாளர்களும், தேர் திருவிழா பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். வருகின்ற புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா பற்றி கலந்தாலோசிக்கப்பட்டு, பணிகள் பகிர்தளிக்கப்பட்டன.


    • 19/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, தலித் விடுதலை ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 18/11/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; மறைமாவட்ட ஆயரின் பிறந்தநாளையொட்டி, சிறப்பாக ஜெபிக்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 16/11/2023 வியாழக் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், பாட்டன் தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திரு. வில்லியம்ஸ் - திருமதி. ஜெயராணி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 17: 20-25. இறந்த ஆன்மாக்களை நினைவு கூரும் நவம்பர் மாதத்தில், இறந்த ஆன்மாக்களுக்காகவும், அதிலும் குறிப்பாக யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காகவும் இல்லத்தில் ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 15/11/2023 புதன் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திரு. விக்டர் சகாயராஜ் - திருமதி. அமலோற்பவமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 17: 11-19. 28/11/2023-இல் தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பிப்பது மற்றும் பங்கு திருவிழாவின் போது, தேரினை சிறந்த முறையில் தயார் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 14/11/2023 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. பத்திநாதன் - திருமதி. பார்பாரம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 17: 7-10. உடல் நலம் குன்றியவர்களின் இல்லத்திற்கு அன்பியமாகச் சென்று ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 13/11/2023 திங்கட் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, தற்போது பயின்று வரும், மறைக்கல்வி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினர்.


    • 12/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திரு. இரபேல் தேவமணி - திருமதி. ஆரோக்கியமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 25: 1-13. 29/11/2023-இல் தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பிப்பது மற்றும் பங்கு திருவிழாவின் போது, தேரினை சிறந்த முறையில் தயார் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 12/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 11/11/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 07/11/2023 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 07/11/2023 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு.ஆரோக்கியசாமி - திருமதி. லூர்தம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 14: 15-24. வருகின்ற சவேரியார்பாளையம் தேர் நவநாள் திருப்பலியை சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 05/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திருமதி. மேரி ருக்மணி ரோஸ் - டேனிஸ் நிஷாந்த் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 23: 1-12. தற்போது பயின்று வரும், மறைக்கல்வி மாணவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்குவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 05/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பியக் கூட்டமானது, திரு. பிரான்சிஸ் - திருமதி. குழந்தை தெரசாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 23: 1-12. வருகின்ற 19ஆம் தேதி, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 05/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மதியம் 1 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியக் கூட்டமானது, திரு.விசுவாசநாதன் - திருமதி. பிலோமினாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 23: 1-12. இம்மாதத்தில் ஒருநாள் சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில், அன்பியக் குடும்பங்களில் மரித்த ஆன்மாக்களுக்காக ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 05/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பிய இறைமக்கள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 04/11/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 03/11/2023 மாதத்தின் முதல் வெள்ளி அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் திருப்பலியும், அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது; இறுதியில் நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 02/11/2023 வியாழக் கிழமை அன்று, காலை 11 மணியளவில், இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவையொட்டி, காவேரிபுரத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்தில் இறந்த விசுவாசிகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காய் வேண்டுதல் செய்யப்பட்டது; பிறகு காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 02/11/2023 வியாழக் கிழமை அன்று, காலை 10 மணியளவில், இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவையொட்டி, சிலுவைபாளையத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்தில் இறந்த விசுவாசிகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காய் வேண்டுதல் செய்யப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா மற்றும் கொளத்தூர் புனித பவுலடியார் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 02/11/2023 வியாழக் கிழமை அன்று, காலை 7 மணியளவில், இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவையொட்டி, செங்கல்மேட்டில் உள்ள ரோமன் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கேற்றனர்.


    • 01/11/2023 புதன் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், புனிதர் அனைவர் பெருவிழாவையொட்டி, சவேரியார்பாளையம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கேற்றனர்.


    • 31/10/2023 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், ஜெபமாலை மாதத்தின் கடைசி நாளையொட்டி, சிலுவைபாளையம் பகுதியைச் சுற்றி சிறுதேர் பவனியானது ஜெபமாலை மற்றும் மன்றாட்டு மாலை ஜெபித்தலுடன் நடைபெற்றது; பின்னர் சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர். இறுதியில் அன்பின் உணவாக பொங்கல் மற்றும் சுண்டல் வழங்கப்பட்டது.


    • 31/10/2023 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், ஜெபமாலை மாதத்தின் கடைசி நாளையொட்டி, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு கெபியிலிருந்தும், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வளாகத்திலும், புனித மரியன்னையின் சிறுதேர் பவனி, ஜெபமாலை, மன்றாட்டு மாலை ஆகியவை நடைபெற்று, திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கேற்றனர்; இறுதியில் அன்பின் உணவு வழங்கப்பட்டது.


    • 29/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திரு. துரைசாமி - திருமதி. மோனிக்கா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 22: 34-40. வருகின்ற நவம்பர் மாதத்தில், அன்பியமாகச் சென்று, கல்லறைகளை சந்தித்து செபம் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 29/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 9:30 மணியளவில், பங்குத்தந்தை இல்லத்தில் அனைத்து அன்பிய இறைமக்களும், அன்பியப் பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்ட பொதுவான கூட்டம் நடைபெற்றது. வருகின்ற கல்லறைத் திருநாள், ஆயர் வருகை, தேர் திருவிழா மற்றும் பிற விஷயங்கள் கலந்தாலோசனை செய்யப்பட்டது.


    • 29/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மரியாயின் சேனையினர் சீருடையில் வந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மற்றும் காணிக்கைப் பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர். பிறகு பழைய திருத்தொண்டருக்கு பிரிவும், புதிய திருத்தொண்டருக்கு வரவேற்பும் வழங்கப்பட்டது.


    • 28/10/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 22/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திருமதி. சகாய மேரி - அலெக்ஸாண்டர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 22: 15-21. வருகின்ற கல்லறைத் திருநாளையொட்டி, இறந்த ஆன்மாக்களுக்காகவும், அதிலும் குறிப்பாக யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காகவும் திருப்பலி ஒப்புக்கொடுப்பது மற்றும் கல்லறையில் கூடி செபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 22/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, பங்கு இளைஞர்கள், இளம்பெண்கள், மறைக்கல்வி மாணவ, மாணவிகள் மற்றும் பீட சிறுவர்கள், சிறுமிகள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 20/10/2023 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:00 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் கெபியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 18/10/2023 புதன் கிழமை அன்று, மதியம் 1 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. சிங்கராயன் - திருமதி. சவரியம்மாள் மற்றும் திரு. அந்தோணிசாமி - திருமதி. ஸ்டெல்லா ஹெலென்சி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 10: 1-9. பூமனூரில் நடைபெறவுள்ள மறைமாவட்ட இளைஞர்களின் தியானத்திற்குத் தேவையான பாலின் ஒரு பகுதியை வழங்குவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 17/10/2023 செவ்வாய்க் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 15/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியக் கூட்டமானது, திரு. அலெக்ஸாண்டர் - திருமதி. உத்திரிய ராணி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 22 : 1-14. அக்டோபர் மாதம் முழுவதும் மாலையில் சிலுவை பாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் ஜெபமாலையை தொடர்ந்து ஜெபிப்பது மற்றும் கடைசி நாளில் சிறு தேர் பவனி எடுப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 15/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 4 மணியளவில், புனித சவேரியார் அன்பிய முன்னெடுப்பில், அனைத்து அன்பிய இறைமக்களும் இணைந்து செங்கல்மேட்டிலுள்ள கல்லறைத் தோட்டத்தை சுத்தம் செய்தனர்.


    • 15/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, ஞாயிறு திருப்பலிக்கு பிறகு, புனித இஞ்ஞாசியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, திருவிவிலிய வார்த்தைகளை இறைமக்களுக்கு வழங்கினர்.


    • 15/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மற்றும் காணிக்கை பவனி ஆகியவற்றை வழிநடத்தினர். இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் காணிக்கைப் பவனியில் இடம்பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


    • 14/10/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 13/10/2023 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திரு. பிரகாஷ் - திருமதி. அனிதா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 11: 15-26. ஜெபமாலை மாதமான அக்டோபர் மாதத்தில், தவறாமல் இல்லத்தில் ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 12/10/2023 வியாழக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திரு. சார்லஸ் ராபர்ட் - திருமதி. ரோஸ்மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 11: 5-13. வருகின்ற கல்லறைத் திருநாளையொட்டி, இறந்த ஆன்மாக்களுக்காகவும், அதிலும் குறிப்பாக யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காகவும் இல்லத்தில் ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 11/10/2023 புதன் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், பாட்டன் தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திரு. வின்சென்ட் - திருமதி. பிரான்சிஸ் மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 11: 1-4. ஜெபமாலை மாதமான அக்டோபர் மாதத்தில், அவரவர் இல்லங்களில் இரவு வேளையில் ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 10/10/2023 செய்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. சவரியப்பன் - திருமதி. மரியசெல்வம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 10: 38-42. வருகின்ற கல்லறைத் திருநாளையொட்டி, காவேரிபுரம் கல்லறைத் தோட்டத்தைச் சுத்தம் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 09/10/2023 திங்கட் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திரு. சூசை - திருமதி. எலிசபெத் ராணி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 10: 25-37. வருகின்ற கல்லறைத் திருநாளை ஒட்டி, இம்மாதத்தின் விடுமுறை நாட்களில் கல்லறைத் தோட்டத்தில் உள்ள புதர்களை சுத்தம் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 08/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பியக் கூட்டமானது, திரு. சவரியப்பன் - திருமதி பெரியநாயகி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 21 : 33 – 43. இம்மாதத்தில் வருகின்ற ஒரு ஞாயிறு திருப்பலிக்குப் பிறகு, திருவிவிலிய வார்த்தைகளை மக்களுக்கு வழங்குதல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 08/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திரு. செல்வநாதன் - திருமதி வியாகுலமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 21 : 33 – 43. அன்பியத்திலுள்ள வீடுகளில் செபமாலை செபிப்பது மற்றும் இஸ்ரேல் மக்களுக்காக இல்லத்தில் குடும்ப செபத்தில் நினைவுகூருவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 08/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, திருமதி மோட்சமேரி அவர்களின் இல்லத்தில், அவரது நோய் நீங்கி குணமடைய, செபம் செய்தனர்.


    • 08/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, நற்செய்தி அறிவிப்பு ஞாயிறை ஒட்டி, சவேரியார் பாளையத்தை சேர்ந்த 3 அன்பியங்களான புனித சவேரியார், குழந்தை இயேசு மற்றும் புனித இஞ்ஞாசியார் அன்பியங்கள் இணைந்து உணவு அரங்கை அமைத்து, நிதி திரட்டினர்.


    • 08/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, கொளத்தூர் புனித பவுலடியார் மற்றும் காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மற்றும் காணிக்கைப் பவனி ஆகியவற்றை வழிநடத்தினர். அன்பியத்திலுள்ள குழந்தைகளின் மூலம் நடைபெற்ற காணிக்கைப் பவனி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான குறிப்பேடுகள் காணிக்கையாக வழங்கப்பட்டது.


    • 07/10/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில், தூய செபமாலை அன்னை நினைவை ஒட்டி, ஆலய வளாகத்தைச் சுற்றி சிறப்பு ஜெபமாலை மற்றும் மன்றாட்டு மாலை ஆகியவை நடைபெற்று, திருவிழா திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 06/10/2023 வெள்ளிக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் பங்குத்தந்தை இல்லத்தில், பங்குத்தந்தை அருட்பணி. சிங்கராயன் தலைமையில் நடைபெற்ற மேய்ப்புப்பணி பேரவை(பங்கு பேரவை) கூட்டத்தில், அனைத்து அன்பிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். வருகின்ற புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. நவம்பர் 26 ஆம் தேதி திருவிழா கொடியேற்றமும், டிசம்பர் 2ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு, பேரருட்திரு. ஆயர் அருள்செல்வம் இராயப்பன் அவர்களின் தலைமையில் புதுநன்மை திருப்பலியும், டிசம்பர் 3ஆம் தேதி காலை 9 மணிக்கு, அருட்பணி. லூக்காஸ் தலைமையில் திருவிழாத் திருப்பலியும் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.


    • 03/10/2023 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 02/10/2023 திங்கட் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், சவேரியார்பாளையம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் விவிலிய ஞாயிறு சிறப்புத் திருப்பலியில் விவிலிய பவனி நடைப்பெற்று, தீப, தூப, மலர் அஞ்சலி காட்டப்பட்டது. பின்னர், சிறந்த ஒளி, ஓலி அமைப்புடன் கலை நிகழ்ச்சிகள், விவிலிய போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து அன்பிய இறைமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். குழந்தைகள் மிகவும் மகிழ்ந்தனர்.


    • 02/10/2023 திங்கட் கிழமை அன்று, காலை 11 மணியளவில், தட்டாங்காட்டில் நடந்த சித்திரப்பட்டிபுதூர் கிராம சபா கூட்டத்தில் சவேரியார்பாளையம் இறை மக்கள் மற்றும் அனைத்து அன்பியப் பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டனர். செங்கல்மேட்டில் உள்ள ரோமன் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்திற்கு பாதை வேண்டி மனு கொடுக்கப்பட்டது; மேலும், சவேரியார்பாளையம் - குரும்பனூர் பிரிவு சாலையில் அமையவிருந்த டாஸ்மாக் மதுபான கடையை திறக்கக்கூடாது என்றும், இந்த சித்திரைப்பட்டிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எங்குமே, டாஸ்மாக் மதுபான கடைகள் அமைக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


    • 01/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் பங்கிலுள்ள அனைத்து அன்பியப் பொறுப்பாளர்கள் இணைந்து, நற்செய்தி அறிவிப்பு ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு மற்றும் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். நற்செய்தி அறிவிப்பு சிறப்பு காணிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் உணவு அரங்குகள் மற்றும் விளையாட்டுகளின் வழியே நற்செய்தி அறிவிப்பு ஞாயிறு நிதி திரட்டப்பட்டது. அனைத்து அன்பியங்களும் அவரவர் பணிகளைச் சிறப்பாக செய்தனர். அனைத்து இறைமக்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


    • 01/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, அன்பியத் துளிகள் என்ற இணையதளப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இது ஓர் அன்பிய நிகழ்ச்சிகளின் தகவல் காப்பகம்.


    • 30/09/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 28/09/2023 வியாழக் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திரு. அந்தோணிசாமி - திருமதி. ரெஜினா மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 1: 47-51.உடல் நலம் குன்றிய திருமதி. மோட்ச மேரி என்பரது இல்லத்திற்கு சென்று, அவரை சந்தித்து, தேவையான ஆறுதல், செப மற்றும் பொருளாதார உதவிகளை செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 25/09/2023 திங்கட் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியக் கூட்டமானது, திருமதி. அசந்தா மேரி ஈசாக்கு அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 8 : 16-18. வருகின்ற அக்டோபர் மாதம் முழுவதும் மாலையில் சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 24/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திருமதி. கமலாமேரி தோமையன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 20: 1-16. வருகின்ற அக்டோபர் மாதம் மாலையில் ஒவ்வொரு நாளாக ஓர் இல்லத்தில், மாதா சுரூபத்தை வைத்து ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 24/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திரு. சவரியப்பன் - திருமதி. அந்தோணியம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 20: 1-16.அன்பியக் கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 24/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பிய இறைமக்கள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மற்றும் காணிக்கைப் பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 23/09/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 20/09/2023 புதன் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியத் திருப்பலியானது, திரு. அருள் பிரான்சிஸ் சேவியர் - திருமதி. ஸ்டெல்லா மேரி மற்றும் திரு. அருளானந்தம் - திருமதி.மாசிலா மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பிய இறைமக்கள் இணைந்து அன்பியத் திருப்பலியைச் சிறப்பித்தனர்; அதனை தொடர்ந்து, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமும் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 7: 31-35. அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் நற்செய்தி அறிவிப்பு ஞாயிறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 17/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் பங்குத்தந்தை இல்லத்தில், பங்குத்தந்தை அருட்பணி. சிங்கராயன் தலைமையில் நடைபெற்ற மேய்ப்புப்பணி பேரவை(பங்கு பேரவை) கூட்டத்தில், வருகின்ற நற்செய்தி அறிவிப்பு ஞாயிறு மற்றும் விவிலிய ஞாயிறு கொண்டாட்டங்கள் பற்றி கலந்தாலோசனை செய்து, அனைத்து அன்பியங்களுக்கும் பணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. அக்டோபர் 1ஆம் தேதி நற்செய்தி அறிவிப்பு ஞாயிறும், அக்டோபர் 2ஆம் தேதி விவிலிய ஞாயிறும் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.


    • 17/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மற்றும் காணிக்கைப் பவனி ஆகியவற்றை வழிநடத்தினர். அனைத்து இறைமக்களுக்கும், விவிலிய வார்த்தைகளை இனிப்புடன் வழங்கினர்.


    • 16/09/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 15/09/2023 வெள்ளிக் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திரு.சவரியப்பன் - திருமதி. ஜான்சி தீபா மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 19: 25-27. வருகின்ற செப்டம்பர் 17ஆம் நாள், ஞாயிறு திருப்பலியை சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 12/09/2023 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பிய இறைமக்கள் பங்கேற்றனர்.


    • 12/09/2023 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, புனித பதுவை அந்தோணியார் சிற்றாலய வளாகத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 6 : 12 - 19. புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில், தொடர்ந்து கூடிச் செபம் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 11/09/2023 திங்கட் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், பாட்டன் தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திரு. ஜெயராஜ் - திருமதி. செல்வி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; விவிலிய ஞாயிறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 11/09/2023 திங்கட் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பியக் கூட்டமானது, ஜேம்ஸ் ராஜ் செல்வம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 6 : 6–11. விவிலிய ஞாயிறு நிகழ்ச்சிகளையொட்டி திருவிவிலிய வார்த்தைகளை மக்களுக்கு வழங்குதல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 10/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித இஞ்ஞாசியார் அன்பிய இறைமக்கள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மற்றும் காணிக்கைப் பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 09/09/2023 சனிக் கிழமை அன்று, காலை 7 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 08/09/2023 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வளாகத்தில், புனித கன்னி மரியாவின் பிறப்புத் திருவிழாவை ஒட்டி, புனித மரியன்னையின் சிறு தேர் பவனி, ஜெபமாலை, மன்றாட்டு மாலை ஆகியவை நடைபெற்று, திருவிழா திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது; மரியாயின் சேனை மற்றும் அனைத்து அன்பியங்களும் சிறப்பித்து, பொங்கல் மற்றும் கேக் வழங்கினர்.


    • 05/09/2023 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திரு. பீட்டர் ராஜா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 4 : 31 - 37. செப்டம்பர் 8-ஆம் தேதி, புனித கன்னி மரியாவின் பிறப்புத் திருப்பலியில் பங்கேற்று, திருஅவையின் அறிவித்தல்படி பெண் குழந்தைகள் நாளாக சிறப்பித்து ஜெபித்தல் மற்றும் விவிலிய ஞாயிறு நிகழ்ச்சிகளை பற்றி அறிவிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 03/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார் பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திரு. இராபர்ட் மாணிக்கம் - திருமதி. வளன் ஜெயந்தி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 16 : 21 - 27. செப்டம்பர் 8-ஆம் தேதி, புனித கன்னி மரியாவின் பிறப்புத் திருப்பலியில் பங்கேற்பது மற்றும் ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 03/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திருமதி. மதலையம்மாள் துரைசாமி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 16 : 21 - 27. செப்டம்பர் 8-ஆம் தேதி, புனித கன்னி மரியாவின் பிறப்புத் திருப்பலியில் பங்கேற்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 03/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பிய இறைமக்கள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மற்றும் காணிக்கைப் பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 02/09/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 01/09/2023 மாதத்தின் முதல் வெள்ளி அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் திருப்பலியும், அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது; இறுதியில் நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 28/08/2023 திங்கட் கிழமை அன்று, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பிய இறைமக்கள் இணைந்து, திரு. கிளமெண்ட் ஜெபமாலை அவர்களின் இல்லத்தில், அவரது நோய் நீங்கி குணமடைய, செபம் செய்தனர்.


    • 27/08/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திரு.ஹென்றி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 1 : 39 - 56. செப்டம்பர் 2ஆம் நாள், புனித பெரியநாயகி அன்னைத் திருத்தலத்தில் நடைபெறும் மாதா தொலைக்காட்சி திருப்பலியில் பங்கேற்பது மற்றும் அன்று மாலை கருங்கரடு லூர்து மாதா கெபியில் நடைபெறும் ஜெபமாலையில் பங்கேற்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 27/08/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் பங்குத்தந்தை இல்லத்தில், ஞாயிறு திருப்பலிக்குப் பிறகு காலை 9:30 மணியளவில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 அன்பியங்களைச் சார்ந்த அனைத்து வழிகாட்டிகளும், துணை வழிகாட்டிகளும், செயலர்களும் ஆர்வத்துடன் ஒன்று கூடினர். மேய்ப்புப்பணி பேரவையின் பொறுப்பாளரான பங்குத்தந்தை அருட்பணி. சிங்கராயன் அருமையாக அன்பியப் பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்தார். மேய்ப்புப்பணி பேரவையின் விதிமுறைகள் விளக்கப்பட்டு, திருஅவையின் சட்டங்களின் அடிப்படையில், அருட்பணி. அமல் மகிமை ராஜ் தலைமையிலான அன்பியப் பணிக்குழு முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. மேய்ப்புப்பணி பேரவையின் துணைப் பொறுப்பாளர், செயலர், அன்பிய ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கு புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கடமைகள் பற்றி விளக்கப்பட்டு, புதிய மேய்ப்புப்பணி பேரவை அமைத்துக் கொடுக்கப்பட்டது.