அன்பியத் துளிகள் - சவேரியார்பாளையம்

சேலம் மறைமாவட்டம்

(An Archive of Events)

  • 2023 (92)
    • 30/11/2023 வியாழக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இன்னாசியார் மற்றும் குழந்தை இயேசு அன்பியத்தார் இணைந்து, புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா நவநாள் மற்றும் புனித அந்திரேயா, திருத்தூதர் திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 29/11/2023 புதன் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா மற்றும் கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியத்தார் இணைந்து, புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்; திருப்பலிக்குப் பிறகு, அன்பின் உணவை வழங்கினர்.


    • 28/11/2023 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கொளத்தூர் புனித பவுலடியார் மற்றும் காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியத்தார் இணைந்து, புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாட்டை வழிநடத்தினர்.


    • 27/11/2023 திங்கட் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பிய இறைமக்கள் ஒன்றிணைந்து, புனித சந்தியாகப்பர் (St.Gerorge) சுரூப பவனியானது சிலுவைப்பாளையத்திலிருந்து ஜெபமாலை ஜெபித்தலுடன் புறப்பட்டு, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு கெபியிலிருந்து புனித சந்தியாகப்பர் புகழ் பா உடன், ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டு, திரு. பத்திநாதன் - திருமதி. பார்பாரம்மாள், திரு. அந்தோணி மரியமைக்கேல் அவர்களின் குடும்பத்தினரால் ஆலயத்திற்கு காணிக்கையாக தரப்பட்டது. பிறகு, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியம், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியம் மற்றும் பாட்டன்தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியத்தார் இணைந்து, தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 26/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, இரவு 6:30 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திரு. அருளப்பன் - திருமதி. தெரசம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 25: 31-46. 01/12/2023-இல் தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பான முறையில் வழிநடத்துவது மற்றும் தேர் திருவிழாவிற்கு இயன்ற உதவிகளை செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 26/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் பங்கிலுள்ள அனைத்து அன்பிய இறைமக்களும் இணைந்து, பங்கு திருவிழா கொடியேற்ற திருப்பலியைச் சிறப்பித்தனர். மங்கள ஆரத்தி, இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள், தீப, தூப, மலரஞ்சலி ஆகியவற்றை வழிநடத்தினர்; பின்னர், மான்ஃபோர்ட் அருட்சகோதரர் கிரசென்சியுஸ் அவர்களால் புனித சவேரியார் திருகொடியானது மந்திரிக்கப்பட்டு, ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்துவரப்பட்டு, அருட்சகோதரர் கிரசென்சியுஸ் அவர்களால் கொடியேற்றப்பட்டது. பின்னர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அனைத்து அன்பியத்தினரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


    • 25/11/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 19/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6:00 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திரு. ஹல்மான் ராபின் ரோமியோ - திருமதி. பெல்சி ஹெலன் மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 25: 14-30. வருகின்ற பங்கு தேர் திருவிழாவையொட்டி, அன்பியமாக இணைந்து தேர் நவநாள் திருப்பலியைச் சிறப்பித்தல் மற்றும் தேர் ஜோடித்தல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 19/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திரு. திவ்யநாதன் - திருமதி. இராதாமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 25: 14-30. இம்மாதத்தில் ஒருநாள், அன்பியமாகச் சென்று, கல்லறைகளை சந்தித்து செபம் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 19/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் பங்குத்தந்தை இல்லத்தில், பங்குத்தந்தை அருட்பணி சிங்கராயன் தலைமையில் நடைபெற்ற அருள்பணி பேரவை(பங்கு பேரவை) கூட்டத்தில், அனைத்து அன்பிய பொறுப்பாளர்களும், தேர் திருவிழா பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். வருகின்ற புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா பற்றி கலந்தாலோசிக்கப்பட்டு, பணிகள் பகிர்தளிக்கப்பட்டன.


    • 19/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித இன்னாசியார் அன்பியத்தார் இணைந்து, தலித் விடுதலை ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 18/11/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; மறைமாவட்ட ஆயரின் பிறந்தநாளையொட்டி, சிறப்பாக ஜெபிக்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 16/11/2023 வியாழக் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், பாட்டன் தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திரு. வில்லியம்ஸ் - திருமதி. ஜெயராணி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 17: 20-25. இறந்த ஆன்மாக்களை நினைவு கூரும் நவம்பர் மாதத்தில், இறந்த ஆன்மாக்களுக்காகவும், அதிலும் குறிப்பாக யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காகவும் இல்லத்தில் ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 15/11/2023 புதன் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திரு. விக்டர் சகாயராஜ் - திருமதி. அமலோற்பவமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 17: 11-19. 28/11/2023-இல் தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பிப்பது மற்றும் பங்கு திருவிழாவின் போது, தேரினை சிறந்த முறையில் தயார் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 14/11/2023 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. பத்திநாதன் - திருமதி. பார்பாரம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 17: 7-10. உடல் நலம் குன்றியவர்களின் இல்லத்திற்கு அன்பியமாகச் சென்று ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 13/11/2023 திங்கட் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியத்தார் இணைந்து, தற்போது பயின்று வரும், மறைக்கல்வி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினர்.


    • 12/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திரு. இரபேல் தேவமணி - திருமதி. ஆரோக்கியமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 25: 1-13. 29/11/2023-இல் தேர் திருவிழா நவநாள் திருப்பலியைச் சிறப்பிப்பது மற்றும் பங்கு திருவிழாவின் போது, தேரினை சிறந்த முறையில் தயார் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 12/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியத்தார் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, காணிக்கை பவனி, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 11/11/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 07/11/2023 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பியத்தினர் பங்கேற்றனர்.


    • 07/11/2023 செய்வாய்க்கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு.ஆரோக்கியசாமி - திருமதி. லூர்தம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 14: 15-24. வருகின்ற சவேரியார்பாளையம் தேர் நவநாள் திருப்பலியை சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 05/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சவேரியார் பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திருமதி. மேரி ருக்மணி ரோஸ் - டேனிஸ் நிஷாந்த் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 23: 1-12. தற்போது பயின்று வரும், மறைக்கல்வி மாணவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்குவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 05/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5 மணியளவில், சவேரியார் பாளையம் புனித இன்னாசியார் அன்பியக் கூட்டமானது, திரு. பிரான்சிஸ் - திருமதி. குழந்தை தெரசாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 23: 1-12. வருகின்ற 19ஆம் தேதி, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 05/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மதியம் 1 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியக் கூட்டமானது, திரு.விசுவாசநாதன் - திருமதி. பிலோமினாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 23: 1-12. இம்மாதத்தில் ஒருநாள் சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில், அன்பியக் குடும்பங்களில்மரித்த ஆன்மாக்களுக்காக ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 05/11/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, குழந்தை இயேசு அன்பியத்தார் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 04/11/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 03/11/2023 மாதத்தின் முதல் வெள்ளி அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் திருப்பலியும், அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது; இறுதியில் நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 02/11/2023 வியாழக் கிழமை அன்று, காலை 11:00 மணியளவில், இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவையொட்டி, காவேரிபுரத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்தில் இறந்த விசுவாசிகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காய் வேண்டுதல் செய்யப்பட்டது; பிறகு காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியத்தார் பங்கேற்றனர்.


    • 02/11/2023 வியாழக் கிழமை அன்று, காலை 10:00 மணியளவில், இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவையொட்டி, சிலுவைபாளையத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்தில் இறந்த விசுவாசிகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காய் வேண்டுதல் செய்யப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா மற்றும் கொளத்தூர் பவுலடியார் அன்பியத்தார் பங்கேற்றனர்.


    • 02/11/2023 வியாழக் கிழமை அன்று, காலை 7:00 மணியளவில், இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவையொட்டி, செங்கல்மேட்டில் உள்ள ரோமன் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கேற்றனர்.


    • 01/11/2023 புதன் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், புனிதர் அனைவர் பெருவிழாவையொட்டி, சவேரியார்பாளையம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கேற்றனர்.


    • 31/10/2023 செய்வாய்க்கிழமை அன்று, மாலை 6 மணியளவில், ஜெபமாலை மாதத்தின் கடைசி நாளையொட்டி, சிலுவைபாளையம் பகுதியைச் சுற்றி சிறுதேர் பவனியானது ஜெபமாலை மற்றும் மன்றாட்டு மாலை ஜெபித்தலுடன் நடைபெற்றது; பின்னர் சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பியத்தினர் பங்கேற்றனர். இறுதியில் அன்பின் உணவாக பொங்கல் மற்றும் சுண்டல் வழங்கப்பட்டது.


    • 31/10/2023 செய்வாய்க்கிழமை அன்று, மாலை 6 மணியளவில், ஜெபமாலை மாதத்தின் கடைசி நாளையொட்டி, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு கெபியிலுருந்தும், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வளாகத்திலும், புனித மரியன்னையின் சிறுதேர் பவனி, ஜெபமாலை, மன்றாட்டு மாலை ஆகியவை நடைபெற்று, திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் பங்கேற்றனர்; இறுதியில் அன்பின் உணவு வழங்கப்பட்டது.


    • 29/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திரு. துரைசாமி - திருமதி. மோனிக்கா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 22: 34-40. வருகின்ற நவம்பர் மாதத்தில், அன்பியமாகச் சென்று, கல்லறைகளை சந்தித்து செபம் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 29/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 9:30 மணியளவில், பங்குத்தந்தை இல்லத்தில் அனைத்து அன்பிய இறைமக்களும், அன்பியப் பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்ட பொதுவான கூட்டம் நடைபெற்றது. வருகின்ற கல்லறைத் திருநாள், ஆயர் வருகை, தேர் திருவிழா மற்றும் பிற விஷயங்கள் கலந்தாலோசனை செய்யப்பட்டது.


    • 29/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மரியாயின் சேனையினர் சீருடையில் வந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள், காணிக்கைப் பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்;அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர். பிறகு பழைய திருத்தொண்டருக்கு பிரிவும், புதிய திருத்தொண்டருக்கு வரவேற்பும் வழங்கப்பட்டது.


    • 28/10/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 22/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திருமதி. சகாய மேரி - அலெக்ஸாண்டர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 22: 15-21. வருகின்ற கல்லறைத் திருநாளையொட்டி, இறந்த ஆன்மாக்களுக்காகவும், அதிலும் குறிப்பாக யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காகவும் திருப்பலி ஒப்புக்கொடுப்பது மற்றும் கல்லறையில் கூடி செபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 22/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, பங்கு இளைஞர்கள், இளம்பெண்கள், மறைக்கல்வி மாணவ, மாணவிகள் மற்றும் பீட சிறுவர்கள், சிறுமிகள் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர்; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 20/10/2023 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:00 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் கெபியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியத்தினர் பங்கேற்றனர்.


    • 18/10/2023 புதன் கிழமை அன்று, மதியம் 1 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. சிங்கராயன் - திருமதி. சவரியம்மாள் மற்றும் திரு. அந்தோணிசாமி - திருமதி. ஸ்டெல்லா ஹெலென்சி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 10: 1-9. பூமனூரில் நடைபெறவுள்ள மறைமாவட்ட இளைஞர்களின் தியானத்திற்குத் தேவையான பாலின் ஒரு பகுதியை வழங்குவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 17/10/2023 செவ்வாய்க் கிழமை அன்று, இரவு 7:00 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பியத்தினர் பங்கேற்றனர்.


    • 15/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியக் கூட்டமானது, திரு. அலெக்ஸாண்டர் - திருமதி. உத்திரிய ராணி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 22 : 1-14. அக்டோபர் மாதம் முழுவதும் மாலையில் சிலுவை பாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் ஜெபமாலையை தொடர்ந்து ஜெபிப்பது மற்றும் கடைசி நாளில் சிறு தேர் பவனி எடுப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 15/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 4 மணியளவில், புனித சவேரியார் அன்பிய முன்னெடுப்பில், அனைத்து அன்பிய இறைமக்களும் இணைந்து செங்கல்மேட்டிலுள்ள கல்லறைத் தோட்டத்தை சுத்தம் செய்தனர்.


    • 15/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, ஞாயிறு திருப்பலிக்கு பிறகு, புனித இன்னாசியார் அன்பியத்தார் இணைந்து, திருவிவிலிய வார்த்தைகளை இறைமக்களுக்கு வழங்கினர்.


    • 15/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பியத்தார் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள், காணிக்கை பவனி ஆகியவற்றை வழிநடத்தினர். இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் காணிக்கைப் பவனியில் இடம்பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


    • 14/10/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 13/10/2023 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திரு. பிரகாஷ் - திருமதி. அனிதா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 11: 15-26. ஜெபமாலை மாதமான அக்டோபர் மாதத்தில், தவறாமல் இல்லத்தில் ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 12/10/2023 வியாழக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திரு. சார்லஸ் ராபர்ட் - திருமதி. ரோஸ்மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 11: 5-13. வருகின்ற கல்லறைத் திருநாளையொட்டி, இறந்த ஆன்மாக்களுக்காகவும், அதிலும் குறிப்பாக யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காகவும் இல்லத்தில் ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 11/10/2023 புதன் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், பாட்டன் தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திரு. வின்சென்ட் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 11: 1-4. ஜெபமாலை மாதமான அக்டோபர் மாதத்தில், அவரவர் இல்லங்களில் இரவு வேளையில் ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 10/10/2023 செய்வாய்க்கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, திரு. சவரியப்பன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 10: 38-42. வருகின்ற கல்லறைத் திருநாளையொட்டி, காவேரிபுரம் கல்லறைத் தோட்டத்தைச் சுத்தம் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 09/10/2023 திங்கட் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திரு. சூசை - திருமதி. எலிசபெத் ராணி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 10: 25-37. வருகின்ற கல்லறைத் திருநாளை ஒட்டி, இம்மாதத்தின் விடுமுறை நாட்களில் கல்லறைத் தோட்டத்தில் உள்ள புதர்களை சுத்தம் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 08/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இன்னாசியார் அன்பியக் கூட்டமானது, திரு. சவரியப்பன் - திருமதி பெரியநாயகி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 21 : 33 – 43. இம்மாதத்தில் வருகின்ற ஒரு ஞாயிறு திருப்பலிக்குப் பிறகு, திருவிவிலிய வார்த்தைகளை மக்களுக்கு வழங்குதல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 08/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திரு. செல்வநாதன் - திருமதி வியாகுலமேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 21 : 33 – 43. அன்பியத்திலுள்ள வீடுகளில் செபமாலை செபிப்பது மற்றும் இஸ்ரேல் மக்களுக்காக இல்லத்தில் குடும்ப செபத்தில் நினைவுகூருவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 08/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியத்தார் இணைந்து, திருமதி மோட்சமேரி அவர்களின் இல்லத்தில், அவரது நோய் நீங்கி குணமடைய, செபம் செய்தனர்.


    • 08/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, நற்செய்தி அறிவிப்பு ஞாயிறை ஒட்டி, சவேரியார் பாளையத்தை சேர்ந்த 3 அன்பியங்களான புனித சவேரியார், குழந்தை இயேசு மற்றும் புனித இன்னாசியார் அன்பியங்கள் இணைந்து உணவு அரங்கை அமைத்து, நிதி திரட்டினர்.


    • 08/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, கொளத்தூர் புனித பவுலடியார் மற்றும் காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியத்தார் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள், காணிக்கைப் பவனி ஆகியவற்றை வழிநடத்தினர். அன்பியத்திலுள்ள குழந்தைகளின் மூலம் நடைபெற்ற காணிக்கைப் பவனி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான குறிப்பேடுகள் காணிக்கையாக வழங்கப்பட்டது.


    • 07/10/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில், தூய செபமாலை அன்னை நினைவை ஒட்டி, ஆலய வளாகத்தைச் சுற்றி சிறப்பு ஜெபமாலை மற்றும் மன்றாட்டு மாலை ஆகியவை நடைபெற்று, திருவிழா திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 06/10/2023 வெள்ளிக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் பங்குத்தந்தை இல்லத்தில், பங்குத்தந்தை அருட்பணி சிங்கராயன் தலைமையில் நடைபெற்ற அருள்பணி பேரவை(பங்கு பேரவை) கூட்டத்தில், அனைத்து அன்பிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். வருகின்ற புனித பிரான்சிஸ் சவேரியார் தேர் திருவிழா பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. நவம்பர் 26 ஆம் தேதி, திருவிழா கொடியேற்றமும், டிசம்பர் 1ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு, பேரருட்திரு ஆயர் அருள்செல்வம் இராயப்பன் அவர்களின் தலைமையில் புதுநன்மை திருப்பலியும், டிசம்பர் 2ஆம் தேதி காலை 9 மணிக்கு, அருட்பணி லூக்காஸ் தலைமையில் திருவிழாத் திருப்பலியும் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.


    • 03/10/2023 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பியத்தினர் பங்கேற்றனர்.


    • 02/10/2023 திங்கட் கிழமை அன்று, மாலை 5:30 மணியளவில், சவேரியார்பாளையம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் விவிலிய ஞாயிறு சிறப்புத் திருப்பலியில் விவிலிய பவனி நடைப்பெற்று, தீப, தூப, மலர் அஞ்சலி காட்டப்பட்டது. பின்னர், சிறந்த ஒளி, ஓலி அமைப்புடன் கலை நிகழ்ச்சிகள், விவிலிய போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து அன்பியத்தினரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். குழந்தைகள் மிகவும் மகிழ்ந்தனர்.


    • 02/10/2023 திங்கட் கிழமை அன்று, காலை 11 மணியளவில், தட்டாங்காட்டில் நடந்த சித்திரப்பட்டிபுதூர் கிராம சபா கூட்டத்தில் சவேரியார்பாளையம் இறை மக்கள் மற்றும் அனைத்து அன்பியப் பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டனர். செங்கல்மேட்டில் உள்ள ரோமன் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்திற்கு பாதை வேண்டி மனு கொடுக்கப்பட்டது.


    • 01/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் பங்கிலுள்ள அனைத்து அன்பியப் பொறுப்பாளர்கள் இணைந்து, நற்செய்தி அறிவிப்பு ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் ஆகியவற்றை வழிநடத்தினர். நற்செய்தி அறிவிப்பு சிறப்பு காணிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் உணவு அரங்குகள் மற்றும் விளையாட்டுகளின் வழியே நற்செய்தி அறிவிப்பு ஞாயிறு நிதி திரட்டப்பட்டது. அனைத்து அன்பியங்களும் அவரவர் பணிகளைச் சிறப்பாக செய்தனர். அனைத்து இறைமக்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


    • 01/10/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, அன்பியத் துளிகள் என்ற இணையதளப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இது ஓர் அன்பிய நிகழ்ச்சிகளின் தகவல் காப்பகம்.


    • 30/09/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 28/09/2023 வியாழக் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திரு. அந்தோணிசாமி - திருமதி. ரெஜினா மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 1: 47-51.உடல் நலம் குன்றிய திருமதி. மோட்ச மேரி என்பரது இல்லத்திற்கு சென்று, அவரை சந்தித்து, தேவையான ஆறுதல், செப மற்றும் பொருளாதார உதவிகளை செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 25/09/2023 திங்கட் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியக் கூட்டமானது, திருமதி. அசந்தா மேரி ஈசாக்கு அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 8 : 16-18. வருகின்ற அக்டோபர் மாதம் முழுவதும் மாலையில் சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 24/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திருமதி. கமலாமேரி தோமையன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 20: 1-16. வருகின்ற அக்டோபர் மாதம் மாலையில் ஒவ்வொரு நாளாக ஓர் இல்லத்தில், மாதா சுரூபத்தை வைத்து ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 24/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5 மணியளவில், கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் அன்பியக் கூட்டமானது, திரு. சவரியப்பன் - திருமதி. அந்தோணியம்மாள் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 20: 1-16.அன்பியக் கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 24/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியத்தார் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள், காணிக்கைப் பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 23/09/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 20/09/2023 புதன் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியத் திருப்பலியானது, திரு. அருள் பிரான்சிஸ் சேவியர் - திருமதி. ஸ்டெல்லா மேரி மற்றும் திரு. அருளானந்தம் - திருமதி.மாசிலா மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கிய மாதா அன்பியத்தார் இணைந்து அன்பியத் திருப்பலியைச் சிறப்பித்தனர்; அதனை தொடர்ந்து, சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் அன்பியக் கூட்டமும் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 7: 31-35. அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் நற்செய்தி அறிவிப்பு ஞாயிறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 17/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் பங்குத்தந்தை இல்லத்தில், பங்குத்தந்தை அருட்பணி சிங்கராயன் தலைமையில் நடைபெற்ற அருள்பணி பேரவை(பங்கு பேரவை) கூட்டத்தில், வருகின்ற நற்செய்தி அறிவிப்பு ஞாயிறு மற்றும் விவிலிய ஞாயிறு கொண்டாட்டங்கள் பற்றி கலந்தாலோசனை செய்து, அனைத்து அன்பியங்களுக்கும் பணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. அக்டோபர் 1ஆம் தேதி நற்செய்தி அறிவிப்பு ஞாயிறும், அக்டோபர் 2ஆம் தேதி விவிலிய ஞாயிறும் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.


    • 17/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியத்தார் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள், காணிக்கைப் பவனி ஆகியவற்றை வழிநடத்தினர். அனைத்து இறைமக்களுக்கும், விவிலிய வார்த்தைகளை இனிப்புடன் வழங்கினர்.


    • 16/09/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 15/09/2023 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 7 மணியளவில், சவேரியார்பாளையம் புனித சவேரியார் அன்பியக் கூட்டமானது, திரு.சவரியப்பன் - திருமதி. ஜான்சி தீபா மேரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - யோவான் 19: 25-27. வருகின்ற செப்டம்பர் 17ஆம் நாள், ஞாயிறு திருப்பலியை சிறப்பிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 12/09/2023 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6:30 மணியளவில், சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது; சிலுவைபாளையம் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பக்கிரிக்காடு ஆரோக்கியமாதா அன்பியத்தினர் பங்கேற்றனர்.


    • 12/09/2023 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் அன்பியக் கூட்டமானது, புனித பதுவை அந்தோணியார் சிற்றாலய வளாகத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 6 : 12 - 19. புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயத்தில், தொடர்ந்து கூடிச் செபம் செய்வது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 11/09/2023 திங்கட் கிழமை அன்று, இரவு 7 மணியளவில், பாட்டன் தோட்டம் ஜெபமாலை மாதா அன்பியக் கூட்டமானது, திரு. ஜெயராஜ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; விவிலிய ஞாயிறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 11/09/2023 திங்கட் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார்பாளையம் புனித இன்னாசியார் அன்பியக் கூட்டமானது, ஜேம்ஸ் ராஜ் செல்வம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 6 : 6–11. விவிலிய ஞாயிறு நிகழ்ச்சிகளையொட்டி திருவிவிலிய வார்த்தைகளை மக்களுக்கு வழங்குதல் என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 10/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் புனித இன்னாசியார் அன்பியத்தார் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர். இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள், காணிக்கைப் பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 09/09/2023 சனிக் கிழமை அன்று, காலை 7 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 08/09/2023 வெள்ளிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வளாகத்தில், புனித கன்னி மரியாவின் பிறப்புத் திருவிழாவை ஒட்டி, புனித மரியன்னையின் சிறு தேர் பவனி, ஜெபமாலை, மன்றாட்டு மாலை ஆகியவை நடைபெற்று, திருவிழா திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது; மரியாயின் சேனை மற்றும் அனைத்து அன்பியங்களும் சிறப்பித்து, பொங்கல் மற்றும் கேக் வழங்கினர்.


    • 05/09/2023 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திரு. பீட்டர் ராஜா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 4 : 31 - 37. செப்டம்பர் 8-ஆம் தேதி, புனித கன்னி மரியாவின் பிறப்புத் திருப்பலியில் பங்கேற்று, திருஅவையின் அறிவித்தல்படி பெண் குழந்தைகள் நாளாக சிறப்பித்து ஜெபித்தல் மற்றும் விவிலிய ஞாயிறு நிகழ்ச்சிகளை பற்றி அறிவிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 03/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், சவேரியார் பாளையம் குழந்தை இயேசு அன்பியக் கூட்டமானது, திரு. இராபர்ட் மாணிக்கம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 16 : 21 - 27. செப்டம்பர் 8-ஆம் தேதி, புனித கன்னி மரியாவின் பிறப்புத் திருப்பலியில் பங்கேற்பது மற்றும் ஜெபமாலை ஜெபிப்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 03/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, மாலை 5 மணியளவில், மோளப்பாறையூர் அமலோற்பவ மாதா அன்பியக் கூட்டமானது, திருமதி. மதலையம்மாள் துரைசாமி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - மத்தேயு 16 : 21 - 27. செப்டம்பர் 8-ஆம் தேதி, புனித கன்னி மரியாவின் பிறப்புத் திருப்பலியில் பங்கேற்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 03/09/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியத்தார் இணைந்து, ஞாயிறு திருப்பலியைச் சிறப்பித்தனர்; இறைவார்த்தை வழிபாடு, நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள், காணிக்கைப் பவனி ஆகியவற்றை வழிநடத்தினர்.


    • 02/09/2023 சனிக் கிழமை அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சகாய மாதா நவநாள் திருப்பலி நடைபெற்றது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 01/09/2023 மாதத்தின் முதல் வெள்ளி அன்று, மாலை 6 மணியளவில், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் திருப்பலியும், அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது; இறுதியில் நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது; அனைத்து அன்பிய இறைமக்களும் கலந்துக் கொண்டனர்.


    • 28/08/2023 திங்கட் கிழமை அன்று, சவேரியார்பாளையம் குழந்தை இயேசு அன்பியத்தார் இணைந்து, திரு. கிளமெண்ட் ஜெபமாலை அவர்களின் இல்லத்தில், அவரது நோய் நீங்கி குணமடைய, செபம் செய்தனர்.


    • 27/08/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, கொளத்தூர் புனித பவுலடியார் அன்பியக் கூட்டமானது, திரு.ஹென்றி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது; வாசித்த, கேட்ட, தியானித்த இறைவார்த்தை - லூக்கா 1 : 39 - 56. செப்டம்பர் 2ஆம் நாள், புனித பெரியநாயகி அன்னைத் திருத்தலத்தில் நடைபெறும் மாதா தொலைக்காட்சி திருப்பலியில் பங்கேற்பது மற்றும் அன்று மாலை கருங்கரடு லூர்து மாதா கெபியில் நடைபெறும் ஜெபமாலையில் பங்கேற்பது என்ற செயல் திட்டமிடப்பட்டது.


    • 27/08/2023 ஞாயிற்றுக் கிழமை அன்று, சவேரியார்பாளையம் பங்குத்தந்தை இல்லத்தில், ஞாயிறு திருப்பலிக்குப் பிறகு காலை 9:30 மணியளவில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 அன்பியங்களைச் சார்ந்த அனைத்து வழிகாட்டிகளும், துணை வழிகாட்டிகளும், செயலர்களும் ஆர்வத்துடன் ஒன்று கூடினர். அருள்பணி பேரவையின் பொறுப்பாளரான பங்குத்தந்தை அருட்பணி. சிங்கராயன் அருமையாக அன்பியப் பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்தார். அருள்பணி பேரவையின் விதிமுறைகள் விளக்கப்பட்டு, திருஅவையின் சட்டங்களின் அடிப்படையில், அருட்பணி. அமல் மகிமை ராஜ் தலைமையிலான அன்பியப் பணிக்குழு முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. அருள்பணி பேரவையின் துணைப் பொறுப்பாளர், செயலர், அன்பிய ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கு புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கடமைகள் பற்றி விளக்கப்பட்டு, புதிய அருள்பணி பேரவை அமைத்துக் கொடுக்கப்பட்டது.